31 ஜன., 2011

மிக கவனத்துடன் காய்களை நகர்த்தும் இஃவானுல் முஸ்லிமீன்

கெய்ரோ,ஜன.31:இஸ்லாமியவாதிகள் ஆட்சிக்கு வந்துவிடுவார்கள் என பிரச்சாரம் செய்து எகிப்தில் ஏகாதிபத்திய ஆட்சியை நிலைநாட்ட மேற்கத்திய நாடுகள் முயலும் என்ற அச்சத்தில் ஹுஸ்னி முபாரக்கிற்கு எதிரான போராட்டத்தில் இஃவானுல் முஸ்லிமீன் என்ற முஸ்லிம் சகோதரத்துவ இயக்கம் மிக கவனத்துடன் காய்களை நகர்த்தி வருகிறது.

போராட்டத்தில் ஈடுபடும் மக்களுக்கு உணவும், மருந்தும் வழங்கி பின்னணியில் இஃவானுல் முஸ்லிமீன் இயக்கம் செயல்படுவதாக அரசியல் நோக்கர்கள் கருதுகின்றனர்.

கடுமையான அடக்குமுறைகளை சந்தித்த பிறகும் இஃவானுல் முஸ்லிமீன் இயக்கத்தின் உள்கட்டமைப்பு மற்றும் போராட்ட வீரியம் வலுவாக உள்ளது. ஆதலால் தேர்தல் நடந்தால் இஃவான்களுக்கு போதுமான இடங்கள் கிடைக்கும் என கருதப்படுகிறது.

ஆனால், தங்களுக்கு விருப்பத்திற்கு ஏற்ப தலை அசைக்கும் ஹுஸ்னி முபாரக் ஆட்சி கவிழ்ந்துவிட்டால் என்ன நிகழும்? என்பதுக் குறித்த அங்கலாய்ப்பில் அமெரிக்காவும், இஸ்ரேலும் உள்ளன.

காஸ்ஸாவிலிருந்து எகிப்தில் நடைபெறும் போராட்டத்தில் ஹமாஸ் இயக்கத்தினர் கலந்துகொள்கின்றனர் என்ற பிரச்சாரம் இதனடிப்படையில்தான் கட்டவிழ்த்து விடப்பட்டுள்ளது.

அமெரிக்க அதிபர் பாரக் ஒபாமா, ஹுஸ்னி முபாரக்கை விமர்சித்தது ஏதோ ஜனநாயகம் மற்றும் மக்கள் சுதந்திரம் குறித்த கவலையினால் அல்ல! மாறாக, 82 வயதான பிறகு ஏன் பதவியில் தொடர வேண்டும், வேறொரு கைப்பாவையிடம் ஆட்சியை ஒப்படைக்க வேண்டியதுதானே என்ற நோக்கமே காரணம் எனவும் கருதப்படுகிறது.

எகிப்திய ராணுவத்தில் குறிப்பாக கீழ்மட்டத்தில் இஸ்லாமியவாதிகளுக்கு அதிக செல்வாக்கு இருப்பதாக கருதப்படுகிறது. என்னவாயினும், இதுவரை ஹுஸ்னி முபாரக்கிற்கு பூரண ஆதரவை தெரிவித்த ராணுவத்தினர் தற்போது போராட்டக்காரர்கள் மீது துப்பாக்கிச்சூடு நடத்த தயங்குவதாக கூறப்படுகிறது. அடுத்த ஆட்சியாளர் யார் என்பதை உறுதிச் செய்துவிட்டு முபாரக் நாட்டைவிட்டு வெளியேற வேண்டுமென ராணுவத்தினர் விரும்புவதாக ஆன்லைன் இண்டலிஜன்ஸ் மாத இதழான ஸ்ட்ராட் ஃபோர் கூறுகிறது.

எகிப்திய போலீசாருக்கும், ராணுவத்தினருக்குமிடையே நிலவும் அரசியல் பகை சில இடங்களில் பின்விளைவுகளை ஏற்படுத்தும் என கருதப்படுகிறது.

1979 ஆம் ஆண்டு ஈரானில் சம்பவித்ததுபோல ராணுவம் தங்களுடன் இணையும் என போராட்டக்காரர்கள் கருதுகின்றனர். முன்பு கமால் அப்துல் நாஸரின் தலைமையிலான இளைய அதிகாரிகள் பிரிட்டீஷாரின் கைப்பாவையாக செயல்பட்ட மன்னர் ஃபாரூக்கை ஆட்சியிலிருந்து வெளியேற்றி அதிகாரத்தை கைப்பற்றினர் என்பது குறிப்பிடத்தக்கது.
செய்தி:தேஜஸ் மலையாள நாளிதழ்

Digg Google Bookmarks reddit Mixx StumbleUpon Technorati Yahoo! Buzz DesignFloat Delicious BlinkList Furl

1 கருத்துகள்: on "மிக கவனத்துடன் காய்களை நகர்த்தும் இஃவானுல் முஸ்லிமீன்"

Mohamed Ismail MZ சொன்னது…

உலகம் முழுவதும் 'இஸ்லாமிய அலை' பரவிக்கொண்டு இருக்குகையில் அதனைக்கண்டு அஞ்சும் அத்தனை ஊடகங்களும் துனீசியாவின் போராட்டம் இஸ்லாத்திற்கு அப்பாற்பட்ட போராட்டம் (The Un-Islamic Revolution - The NEWSWEEK) என்று வரிந்து கட்டிக்கொண்டு களத்தில் இறங்கியுள்ள தருணத்தில் இஹ்வானுல்முஸ்லிமூன் இயக்கத்தினரின் செயல்பாடு என்னை சிந்திக்கஸ் செய்ய வைக்கின்றது. ஆம். எகிப்தில் அருமையாக காயை நகர்த்துகிறார்கள்.

கருத்துரையிடுக