15 ஜன., 2011

ஆசாத் என்கவுண்டர்:மத்திய மற்றும் ஆந்திர அரசுக்கு உச்ச நீதிமன்றம் நோட்டீஸ்

புதுடெல்லி,ஜன.15:மாவோயிஸ்ட் மூத்த தலைவர் ஆசாத் என்கவுன்ட்டர் வழக்கு தொடர்பாக விளக்கம் அளிக்குமாறு மத்திய, ஆந்திர மாநில அரசுகளுக்கு உச்ச நீதிமன்றம் வெள்ளிக்கிழமை உத்தரவிட்டது.

இது தொடர்பான வழக்கு நீதிபதிகள் அல்தாப் ஆலம், ஆர்.எம்.லோதா ஆகியோர் முன்பு விசாரணைக்கு வந்தது.

"குடியரசு நாட்டில் நமது சொந்த குழந்தைகளை நாமே சுட்டுக் கொல்ல அனுமதிக்க முடியாது. இது தொடர்பாக மத்திய, ஆந்திர மாநில அரசுகள் உரிய விளக்கம் அளிக்கும் என்று நம்புகிறோம்" என நீதிபதிகள் குறிப்பிட்டனர்.

கடந்த ஜூலையில் ஆந்திர போலீஸார் நடத்திய என்கவுண்டரில், ஆசாத்தும், மாவோயிஸ்டு என்ற சந்தேகத்தின்பேரில் செய்தியாளர் ஹேமச்சந்திர பாண்டேவும் சுட்டுக் கொல்லப்பட்டனர். போலி என்கவுன்ட்டரில் அவர்கள் கொல்லப்பட்டிருப்பதாக குற்றஞ்சாட்டி சுவாமி அக்னிவேஸூம், ஹேமச்சந்திர பாண்டேவின் மனைவி பாபித்தும் உச்ச நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தனர்.

இவ்வழக்கை விசாரித்த நீத்பதிகள் இவ்வாறு தெரிவித்தனர்.

Digg Google Bookmarks reddit Mixx StumbleUpon Technorati Yahoo! Buzz DesignFloat Delicious BlinkList Furl

1 கருத்துகள்: on "ஆசாத் என்கவுண்டர்:மத்திய மற்றும் ஆந்திர அரசுக்கு உச்ச நீதிமன்றம் நோட்டீஸ்"

Mohamed Ismail MZ சொன்னது…

இப்படியே விளக்கம் கேட்டுக்கொண்டே இருக்க வேண்டியதுதான்! இவங்க வீட்டில் ஏதாவது நடக்கனும்...அப்பதான் அறிவு வரும்

கருத்துரையிடுக