டெஹ்ரான்,ஜன.12:ஈரான் அணு விஞ்ஞானிகளுக்கெதிரான இஸ்ரேலின் பயங்கரவாதச் செயலை சட்டத்தின் முன்னால் கொண்ருவருவதற்கு தேவையான எல்லா முயற்சிகளையும் எடுப்போம் என ஈரான் அறிவித்துள்ளது.
இந்த சட்டவிரோத அரசை(இஸ்ரேல்) கண்டிக்கவும், மனித இனத்திற்கு எதிராகவும், எங்களுடைய விஞ்ஞானிகளுக்கெதிராகவும் செயல்பட்டார்கள் என்ற நிலையில் அவர்களை தண்டிப்பதற்கான நடவடிக்கைகளை முன்னெடுத்துச் செல்வோம் என ஈரானின் வெளியுறவுத்துறை அமைச்சக செய்தித் தொடர்பாளர் ராமின் மெஹ்மான் பெரஸ்த் தெரிவித்துள்ளார்.
சர்வதேச நீதிக்கட்டமைப்புகளில் இஸ்ரேலுக்கு எதிரான எல்லா வழிகளையும் தேடுவோம் என அவர் தெரிவித்தார்.
இஸ்ரேலின் சட்டவிரோத நடவடிக்கைகளுக்கு ஆதரவளிக்கும் மேற்கத்திய நாடுகளையும் மெஹ்மான் பெரஸ்த் கண்டித்தார்.
ஈரான் அணு விஞ்ஞானி மசூத் அலி முஹம்மதியின் கொலைக் குறித்து ஈரான் மேற்கொள்ளப்போகும் நடவடிக்கைகள் என்ன என்ற கேள்விக்கு பதிலளிக்கையில் பெரஸ்த் இதனை தெரிவித்தார்.
டெஹ்ரான் பல்கலைக்கழகத்தில் பேராசிரியராக பணியாற்றிய டாக்டர் மசூத் அலி முஹம்மதி கடந்த 2010 ஜூலை மாதம் டெஹ்ரானில் நடந்த ஒரு குண்டுவெடிப்பில் பலியானார். இதுத்தொடர்பாக சிலரை கைதுச் செய்துள்ளதாகவும், இஸ்ரேலின் உளவு நெட்வொர்க்கை முறியடித்ததாகவும் நேற்று முன்தினம் ஈரான் அறிவித்திருந்தது.
செய்தி:தேஜஸ் மலையாள நாளிதழ்

0 கருத்துகள்: on "இஸ்ரேலின் பயங்கரவாதத்தை சட்டத்தின் முன்னால் கொண்டுவருவோம் - ஈரான்"
கருத்துரையிடுக