12 ஜன., 2011

இஸ்ரேல் அரஃபாத்திற்கு தாலியம் விஷம் கொடுத்ததாக தகவல்

ராமல்லா,ஜன.12:காலஞ்சென்ற ஃபலஸ்தீன் விடுதலை இயக்க தலைவர் யாசர் அரஃபாத்திற்கு உணவிலோ அல்லது குடிநீரிலோ கடுமையான விஷமான தாலியத்தை கொடுத்துள்ளது என அவரது மரணத்தைக் குறித்த விசாரணையில் தெரியவந்துள்ளது.

பிரிட்டீஷ் ஃபாரன்சிக் வல்லுநர்கள் நடத்திய விசாரணையில் இது தெரியவந்ததாக அரஃபாத்தின் முன்னாள் சிறப்பு ஆலோசகர் பஸ்ஸாம் அபூ ஷெரீஃப் தெரிவித்துள்ளார்.

மரணத்தை விளைவிக்கும் தாலியம் விஷத்தை ஒருவரின் உயிரைப் பறிப்பதற்காக அவர் உண்ணும் உணவில் கலக்கப்படும். அரஃபாத்தின் மரணத்தைக் குறித்து விசாரிக்கும் கமிட்டிக்கு இந்த விபரம் உடனடியாக ஒப்படைக்கப்படும் என அபூ ஷெரீஃப் தெரிவித்தார்.

ரமல்லாவில் தனது வீட்டில் இஸ்ரேலால் தடுத்து வைக்கப்பட்டிருந்த காலத்தில் அவருடைய உணவிலோ அல்லது குடிநீரிலோ இஸ்ரேல் விஷத்தை கலந்து அளித்ததாக அவருடைய ஆலோசகர் குற்றஞ்சாட்டியிருந்தார்.

2004 நவம்பர் 11-ஆம் தேதி மர்மமான முறையில் ஒரு பிரான்சு நாட்டு மருத்துவமனையில் அரஃபாத் உயிரிழந்தார்.
செய்தி:தேஜஸ் மலையாள நாளிதழ்

Digg Google Bookmarks reddit Mixx StumbleUpon Technorati Yahoo! Buzz DesignFloat Delicious BlinkList Furl

0 கருத்துகள்: on "இஸ்ரேல் அரஃபாத்திற்கு தாலியம் விஷம் கொடுத்ததாக தகவல்"

கருத்துரையிடுக