21 ஜன., 2011

மகரஜோதி செயற்கையானதா? - கேரள உயர்நீதிமன்றம் எழுப்பிய சந்தேகம்

கொச்சி,ஜன.21:சபரிமலையில் ஆண்டுதோறும் தென்படுவதாக கூறப்படும் மகரஜோதி மனிதர்களால் ஏற்பாடுச் செய்யப்பட்டதா? என்ற சந்தேகத்தை கிளப்பியுள்ள கேரள மாநில உயர்நீதிமன்றம் இதுத் தொடர்பாக விளக்கமளிக்கும்படி தேவஸம்போர்டிடம் (ஹிந்து அறநிலையத்துறை) உத்தரவிட்டுள்ளது.

சபரி மலை அருகே புல்லுமேடு வனப்பகுதியில் பக்தர்கள் சென்றுக்கொண்டிருக்கும் வேளையில் ஏற்பட்ட நெரிசலில் நூற்றுக்கும் மேற்பட்டவர்கள் பலியாயினர்.

இதுத்தொடர்பான வழக்கை தாமகவே முன்வந்து பதிவுச்செய்து விசாரணைக்கு எடுத்துக்கொண்ட கேரளமாநில உயர்நீதிமன்ற நீதிபதிகள் பி.ராதாகிருஷ்ணன், பி.எஸ்.கோபிநாத் ஆகியோர் அடங்கிய தேவஸம் பெஞ்ச் மகரஜோதி தொடர்பாக தமது சந்தேகத்தை எழுப்பியது.

மகரவிளக்கிற்கும், மகரஜோதிக்குமிடையேயான வித்தியாசம் என்ன? என்பதை விளக்குமாறும் நீதிமன்றம் உத்தரவிட்டது. அது நம்பிக்கை தொடர்பானது என தேவஸம்போர்டு சார்பாக பதிலளிக்கப்பட்டது.

நம்பிக்கைத் தொடர்பானதாக இருந்தாலும், சில காரியங்களில் நீதிமன்றம் தலையிட வேண்டிவரும் என நீதிமன்றம் அறிவித்தது. புல்லுமேடு வனப்பகுதியில் வாகனங்கள் செல்வதற்கு யார் அனுமதியளித்தார்கள்? பெரியார் டைகர் ரிஸர்வில் பக்தர்கள் எவ்வாறு நுழைந்தனர்? கட்டுப்படுத்த வேண்டிய பொறுப்பு யாருடையது? ஆகிய காரியங்களில் அரசு விளக்கமளிக்க வேண்டும் என நீதிமன்றம் உத்தரவிட்டது.

விபத்துத் தொடர்பாக கேரள மாநில உள்துறை செயலாளரின் அறிக்கையின் அடிப்படையில் அமைச்சரவையின் சிறப்புக் கூட்டம் வருகிற வியாழக்கிழமை கூடும் எனவும், அரசு நிலைப்பாட்டை அறிவிக்க கால அவகாசம் தேவை எனவும் அட்வக்கேட் ஜெனரல் கோரிக்கை விடுத்தார்.வருகிற வெள்ளிக்கிழமை அறிக்கையை சமர்ப்பிக்க நீதிமன்றம் உத்தரவிட்டது.
செய்தி:தேஜஸ் மலையாள நாளிதழ்

Digg Google Bookmarks reddit Mixx StumbleUpon Technorati Yahoo! Buzz DesignFloat Delicious BlinkList Furl

0 கருத்துகள்: on "மகரஜோதி செயற்கையானதா? - கேரள உயர்நீதிமன்றம் எழுப்பிய சந்தேகம்"

கருத்துரையிடுக