27 ஜன., 2011

மோடி ஆதரவு கருத்து: தேவ்பந்த் துணைவேந்தர் ராஜினாமா!

தேவ்பந்த்,ஜன.27:மோடிக்கு ஆதரவாகக் கருத்து கூறியதாக எழுந்த சர்ச்சையைத் தொடர்ந்து தேவ்பந்த தாருல் உலூம் மதரஸாவின் துணை வேந்தராகப் புதிததாகத் தேர்ந்தெடுக்கப்பட்ட மெளலானா குலாம் முஹம்மது தன்னுடைய பதவியை ராஜினாமா செய்துள்ளார்.

உத்திரப் பிரதேச மாநிலம் தேவ்பந்தில் உள்ள தாருல் உலூம் என்ற மத்ரஸாவின் துணை வேந்தராக குஜராத்தைச் சேர்ந்த மெளலானா குலாம் முஹம்மது வஸ்தன்வி என்பவர் அண்மையில் தேர்ந்தெடுக்கப்பட்டார்.

மோடியின் ஆட்சிக்காலத்தில் முஸ்லிம்கள் துன்புறுத்தப்படுவதில்லை; மாறாக மோடியின் வளர்ச்சித் திட்டங்களால் குஜராத் முஸ்லிம்கள் பலனடைகின்றனர் என மெளலானா குலாம் கூறியதாக தகவல்கள் வெளியாகி இருந்தன.

இதனைத் தொடர்ந்து துணைவேந்தர் பதவியில் இருந்து மெளலானா குலாமை நீக்க வேண்டும் என்று தாருல் உலூம் மாணவர்கள் மற்றும் ஆசியரிகள் வலியுறுத்தியதைத் தொடர்ந்து, மெளலானா குலாம் தன்னுடைய பதவி விலகல் அறிவிப்பை வெளியிட்டுள்ளார்.

தாருல் உலூமின் ஆலோசனைக் குழுதான் என்னைத் தேர்ந்தெடுத்தது. ஆலோசனைக் குழுவின் கூட்டம் பிப்ரவரி 15ஆம் தேதி நடைபெறவுள்ளது. அதனைத் தொடர்ந்து நான் பதவி விலகுவேன் என மெளலானா குலாம் செவ்வாய்க் கிழமையன்று கூறியதாக ஊடகங்களில் தகவல் வெளியாகியுள்ளது.

20 உறுப்பினர்களைக் கொண்ட தாருல் உலூமின் ஆலோசனைக் குழு கடந்த ஜனவரி மாதம் 10ஆம் தேதி கூடியபோது மெளலானா குலாமை துணை வேந்தராகத் தேர்ந்தெடுத்தது. இந்த ஆலோசனைக் குழுவில் தற்போது 17 பேர் மட்டுமே இருப்பதாகவும் அவர்களில் 14 பேர் மட்டுமே ஜனவரி 10ஆம் தேதி நடைபெற்ற கூட்டத்தில் கலந்து கொண்டனர் என்றும் கூறப்படுகிறது.

மோடி குறித்து மெளலானா குலாம் கூறிய கருத்துகள் பிரச்சனை ஏற்படுத்தியதைத் தொடர்ந்து, கோத்ரா கலவரத்திற்குப் பின் மோடிக்கு தான் நற்சான்றிதழ் வழங்கவில்லை என்று மெளலானா குலாம் மறுத்துள்ளார்.
twocircles,inneram

Digg Google Bookmarks reddit Mixx StumbleUpon Technorati Yahoo! Buzz DesignFloat Delicious BlinkList Furl

1 கருத்துகள்: on "மோடி ஆதரவு கருத்து: தேவ்பந்த் துணைவேந்தர் ராஜினாமா!"

பெயரில்லா சொன்னது…

LOOSAPA NEE?

கருத்துரையிடுக