
ஆணையத்தின் தலைவர் திருமதி கிரிஜா வியாஸ்,இது பெண்ணுரிமையையும், பத்திரிக்கை உரிமையையும் பறிக்கும் செயல் என்று கூறியுள்ளார்.
இதுசம்பந்தமான மீடியா அறிக்கையுள்ளவர்கள் அறிக்கைகளை ஆணையத்திடம் சமர்ப்பிக்குமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள் என்றார்.
டெஹல்கா இதழின் கேரள பத்திரிக்கையாளராக இருக்கும் KK ஷஹினா மீது பயமுறுத்தி தகவல் பெற்றதாக கர்நாடக போலீஸ் வழக்குப் பதிவு செய்துள்ளது.
2008ல் பெங்களூரில் நடந்த குண்டுவெடிப்பு சம்பவத்தின் 2 சாட்சிகளை சந்தித்து அவர்கள் அளித்த தகவல்களின் அடிப்படையில் ஷஹினா தனது பத்திரிக்கையில் போலீஸாரின் வாதம் தவறு என்று அறிக்கை வெளியிட்டுள்ளார். இதற்காகதான் போலீஸார் அவர் மீது வழக்கு பதிவு செய்துள்ளனர்.
0 கருத்துகள்: on "பத்திரிக்கையாளர் ஷஹினா மீதான கர்நாடக அரசின் வழக்கை விசாரணை செய்ய தேசிய மகளிர் ஆணையம் முடிவு"
கருத்துரையிடுக