9 ஜன., 2011

சம்ஜோதா குண்டுவெடிப்பு: குற்றவாளிகளை விரைவில் சட்டத்தின் முன்னால் கொண்டுவர வேண்டும் - பாகிஸ்தான்

இஸ்லாமாபாத்,ஜன.9:சம்ஜோதா எக்ஸ்பிரஸ் ரெயில் குண்டுவெடிப்பில் ஆர்.எஸ்.எஸ்ஸின் பங்கினைக் குறித்து குற்றவாளிகளே ஒப்புக்கொண்ட சூழலில் விரைவில் குற்றவாளிகளை சட்டத்தின் முன்னால் கொண்டுவர வேண்டும் என பாகிஸ்தான் கோரிக்கை விடுத்துள்ளது.

சம்ஜோதா எக்ஸ்பிரஸ் குண்டுவெடிப்பு விசாரணை குற்றவாளிகளை கண்டறிய நான்கு ஆண்டுகள் ஆகியுள்ளன. குற்றவாளிகளை சட்டத்தின் முன்னால் கொண்டுவர இனிமேலும் தாமதிக்கக் கூடாது என பாகிஸ்தானின் வெளியுறவுத்துறை அமைச்சக செய்தித் தொடர்பாளர் அப்துல் பாஸித் தெரிவித்துள்ளார்.

2007 ஆம் ஆண்டு சம்ஜோதா எக்ஸ்பிரஸ் குண்டுவெடிப்பு உள்பட இந்தியாவில் நடந்த பல்வேறு குண்டுவெடிப்புகளில் ஹிந்துத்துவா பயங்கரவாதிகளின் பங்கினைக் குறித்து சில தினங்களுக்கு முன்னால் ஹிந்துத்துவா பயங்கரவாதி சுவாமி அஸிமானந்தா சிறப்பு சி.பி.ஐ நீதிமன்றத்தில் வாக்குமூலம் அளித்திருப்பதைக் குறித்து கேள்வி எழுப்பியதற்கு அப்துல் பாஸித் இவ்வாறு பதிலளித்தார்.

சம்ஜோதா எக்ஸ்பிரஸ் குண்டுவெடிப்பில் பலியானவர்களில் பெரும்பாலோர் பாகிஸ்தான் நாட்டைச் சார்ந்தவர்களாவர். இந்தியாவிடமிருந்து அதிகாரப்பூர்வமான பதிலுக்காக காத்திருக்கிறோம். பயங்கரவாதத் தாக்குதலில் உறவினர்களை இழந்த 42 பாகிஸ்தான் குடும்பங்கள் நீதிக்காக காத்திருக்கின்றன.

தாக்குதல் நேரத்தில் இந்தியாவிடமிருந்து வெளிப்பட்ட உணர்ச்சி வேகமான பதில் தவிர்க்கப்பட வேண்டியது என்பதை சுவாமி அஸிமானந்தாவின் வாக்குமூலம் தெளிவுப்படுத்துகிறது. இவ்வாறு அப்துல் பாஸித் தெரிவித்தார்.

சம்ஜோதா எக்ஸ்பிரஸ் ரெயில் குண்டுவெடிப்பின் விசாரணை முன்னேற்றத்தைக் குறித்த விபரங்களை அளிக்குமாறு கடந்த இரண்டு ஆண்டுகளில் பாகிஸ்தான் பலதடவை இந்தியாவிடம் கோரிக்கை விடுத்திருந்தது.

Digg Google Bookmarks reddit Mixx StumbleUpon Technorati Yahoo! Buzz DesignFloat Delicious BlinkList Furl

0 கருத்துகள்: on "சம்ஜோதா குண்டுவெடிப்பு: குற்றவாளிகளை விரைவில் சட்டத்தின் முன்னால் கொண்டுவர வேண்டும் - பாகிஸ்தான்"

கருத்துரையிடுக