25 பிப்., 2011

லிபியா எழுச்சி:கொல்லப்பட்ட நிலையில் 130 ராணுவ வீரர்கள்

திரிபோலி,பிப்.25:லிபியாவில் மக்களை நோக்கி சுடத் தயங்கிய ராணுவ வீரர்கள் 130 பேர் கொல்லப்பட்ட நிலையில் கண்டெடுக்கப்பட்டுள்ளனர். இதனை சர்வதேச மனித உரிமை அமைப்பான ஐ.எஃப்.ஹெச்.ஆர் தெரிவித்துள்ளது.
கைகளை கட்டிய பிறகு ராணுவம் இவர்களை சுட்டுக் கொன்றுள்ளதாக அந்த அமைப்பு தெரிவிக்கிறது.

கிழக்கு லிபியாவில் பெங்காஸி நகரத்தில் இச்சம்பவம் நிகழ்ந்துள்ளது. எழுச்சிப் போராட்டத்தில் ஈடுபட்டுள்ள மக்கள் மீது தாக்குதல் நடத்த அந்நாட்டின் ஏகாதிபத்தியவாதி முஅம்மர் கத்தாஃபியின் உத்தரவுக்கு எதிராக ராணுவத்தில் ஒருபிரிவினர் கட்டுப்பட மறுக்கின்றனர்.

இதற்கிடையேத்தான் கத்தாஃபியின் ராணுவ நடவடிக்கைக்கான உத்தரவுக்கு கட்டுப்படாத 130 ராணுவத்தினரை கொன்ற தகவல் வெளியாகியுள்ளது. இச்சம்பவத்தைக் குறித்து சர்வதேச நீதிமன்றம் வழக்குப் பதிவுச்செய்ய வேண்டுமென ஐ.எஃப்.ஹெச்.ஆர் வலியுறுத்தியுள்ளது.

பெங்காசியில் மருத்துவமனைகள் இறந்த உடல்கள் மற்றும் காயமடைந்தோர்களால் நிரம்பி வழிகின்றன. அமெரிக்க அதிபர் பாரக் ஒபாமா உள்பட சர்வதேச தலைவர்கள், ஐ.நா பாதுகாப்பு கவுன்சில் ஆகியன லிபியாவுக்கு கண்டனம் தெரிவித்த நிலையில் போராட்டத்தில் ஈடுபடும் மக்களுக்கு எதிராக லிபிய ராணுவம் நவீன தொழில்நுட்பம் வாய்ந்த ஆயுதங்களை பயன்படுத்துகிறது. ஆனால், லிபியாவின் பெரும்பாலான நகரங்கள் ராணுவத்தின் கட்டுப்பாட்டை இழந்துக் கொண்டிருக்கின்றன.
செய்தி:மாத்யமம்

Digg Google Bookmarks reddit Mixx StumbleUpon Technorati Yahoo! Buzz DesignFloat Delicious BlinkList Furl

0 கருத்துகள்: on "லிபியா எழுச்சி:கொல்லப்பட்ட நிலையில் 130 ராணுவ வீரர்கள்"

கருத்துரையிடுக