15 பிப்., 2011

பாகிஸ்தானி​ல் பயணிகள் பேருந்து தீப்பிடித்து 20 பேர் உயிரிழப்பு

இஸ்லாமாபாத்,பிப்.15:பாகிஸ்தானில் பயணிகள் பேருந்து ஒன்று தீப்பிடித்துக் கொண்டதில் 20 பேர் உயிரிழந்ததுடன், பலர் காயமடைந்துள்ளனர்.

ராவல் பிண்டிக்கு அருகே குஜார்கான் பகுதியில் இச்சம்பவம் இடம்பெற்றுள்ளது. தீவிபத்துக்கான காரணம் உடனடியாக அறியப்படவில்லை. எனினும் பேருந்தினுள் இருந்த சிலிண்டர் வெடித்ததாலேயே அங்கு தீ ஏற்பட்டதாக சம்பவத்தை நேரில் கண்டவர்கள் தெரிவித்துள்ளனர்.

மேலும், அப்பேருந்து ஸியல்கொட் என்ற பகுதியிலிருந்து திரும்பிக் கொண்டிருந்ததாகவும் அதில் பயணித்தவர்கள் யாவரும் திருமண நிகழ்வொன்றுக்கு சென்றுவிட்டுத் திரும்பிக் கொண்டிருந்தபோதே இவ்விபத்து ஏற்பட்டுள்ளது.

சம்பவத்தில் கொல்லப்பட்டவர்களின் உடல்களை மீட்கும் பணியில் மீட்புப்படையினர் ஈடுபட்டுள்ள நிலையில் மீட்புப் பணிகளுக்கு தேவையான உபகரணங்கள் இல்லையென்பதால் சிரமங்கள் ஏற்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது. அத்துடன், மீட்கப்பட்ட உடல்கள் மிகமோசமாகக் கருகியுள்ளதால் அடையாளம் காண்பதில் சிரமம் ஏற்பட்டுள்ளதாக மீட்பு நடவடிக்கையில் ஈடுபட்ட அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

காயமடைந்தவர்கள் அருகிலுள்ள மருத்துவமனையொன்றில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். கடந்த மாதம் சிந்து மாகாணத்தில் பயணிகள் பேருந்து ஒன்று பெட்ரோல் டாங்கர் மீது மோதியதில் 30 பேர் உடல்கருகி உயிரிழந்தது குறிப்பிடத்தக்கது.

இந்துஸ்தான் ரைம்ஸ்

Digg Google Bookmarks reddit Mixx StumbleUpon Technorati Yahoo! Buzz DesignFloat Delicious BlinkList Furl

0 கருத்துகள்: on "பாகிஸ்தானி​ல் பயணிகள் பேருந்து தீப்பிடித்து 20 பேர் உயிரிழப்பு"

கருத்துரையிடுக