21 பிப்., 2011

லிபியாவில் சர்வாதிகாரத்தின் கோரத்தாண்டவம் - மரணம் 200 தாண்டியது

திரிபோலி,பிப்.21:ஆட்சிமாற்றம் கோரி மக்கள் எழுச்சிப் போராட்டம் நடந்துவரும் லிபியாவில் நேற்றும் பாதுகாப்புப் படையினரின் துப்பாக்கிகளிலிருந்து வெளிப்பட்ட தோட்டாக்கள் அப்பாவி மக்களின் உயிரை பறித்தன.

பெங்காசி நகரத்தில் நேற்று முன்தினம் மரணித்தவர்களை அடக்கம் செய்ய ஒன்றுக்கூடிய மக்களின் மீது பாதுகாப்புப்படை அரக்கத்தனமாக முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் எதுவும் மேற்கொள்ளாமலே சுட்டுத்தள்ளினர். இதனால் லிபியாவில் எழுச்சிப் போராட்டத்தில் மரணித்தவர்களின் எண்ணிக்கை 300-ஐ தாண்டியுள்ளது.

காயமடைந்தவர்களையும், இறந்தவர்களின் உடல்களையும் அனுமதிக்கப்பட்டுள்ள மருத்துவமனையின் டாக்டர்கள் இதனை தெரிவித்துள்ளனர்.

துனீஷியாவில் உருவான மக்கள் எழுச்சியினால் உத்வேகமடைந்த லிபியா நாட்டு மக்கள் அந்நாட்டு சர்வாதிகாரியான முஅம்மர் கத்தாஃபிக்கு எதிராக போராட வீதிகளில் களமிறங்கினர். அவர்களை ஏகாதிபத்தியவாதி கத்தாஃபியின் அரக்கத்தனமான பாதுகாப்புப் படையினர் துப்பாக்கியாலும், கத்தியாலும் எதிர்கொண்டு தாக்குவதாக நேரில் கண்ட சாட்சிகள் கூறுகின்றனர்.

செய்தி:மாத்யமம்

Digg Google Bookmarks reddit Mixx StumbleUpon Technorati Yahoo! Buzz DesignFloat Delicious BlinkList Furl

0 கருத்துகள்: on "லிபியாவில் சர்வாதிகாரத்தின் கோரத்தாண்டவம் - மரணம் 200 தாண்டியது"

கருத்துரையிடுக