23 பிப்., 2011

காங்கோ கூட்டு பாலியல் வன்புணர்வு: ராணுவ கர்னலுக்கு 20 வருட சிறை

கின்ஷாஸா,பிப்.23:கூட்டுப் பாலியல் வன்புணர்வு நடத்தியதுத் தொடர்பான வழக்கில் காங்கோ நாட்டு ராணுவ கர்னல் டானியல் கிபிபிக்கு அந்நாட்டு நீதிமன்றம் 20 வருட சிறைத்தண்டனை அளித்துள்ளது.

மூத்த ராணுவ அதிகாரியொருவருக்கு காங்கோ நாட்டில் முதன்முறையாக இவ்வளவு வருடகால தண்டனை விதிக்கப்பட்டுள்ளது. குற்றவாளி மனிதத் தன்மைக்கு எதிரான குற்றத்தைச் செய்துள்ளார் என நீதிமன்றம் தனது தீர்ப்பில் கூறியுள்ளது.

குற்றவாளிக்கு மரணத்தண்டனை விதிக்க வேண்டுமென அரசு தரப்பு வழக்கறிஞர்கள் வலியுறுத்தினர்.

ஃபிஸி கிராமத்தில் புதுவருட கொண்டாட்டத்தின்போது ஆக்கிரமித்து உள்ளே நுழைந்த கிபிபியின் தலைமியிலான ராணுவத்தினர் வெறித்தனமாக 62 பெண்களை பாலியல் வன்புணர்வுக்கு ஆளாக்கியதாக வழக்கு. கிபிபி தன்னை 40 நிமிடங்கள் பாலியல் கொடுமைச் செய்ததாக ஒரு பெண்மணி வாக்குமூலம் அளித்துள்ளார். இதர மூன்று அதிகாரிகளுக்கு இதேப்போல தண்டனை வழங்கப்பட்டுள்ளது. ஒருவரை நீதிமன்றம் விடுதலைச் செய்தது.

செய்தி:தேஜஸ் மலையாள நாளிதழ்

Digg Google Bookmarks reddit Mixx StumbleUpon Technorati Yahoo! Buzz DesignFloat Delicious BlinkList Furl

0 கருத்துகள்: on "காங்கோ கூட்டு பாலியல் வன்புணர்வு: ராணுவ கர்னலுக்கு 20 வருட சிறை"

கருத்துரையிடுக