23 பிப்., 2011

எகிப்து:முபாரக்கின் சொத்துக்களை முடக்க கோரிக்கை

கெய்ரோ,பிப்.23:எகிப்தில் 30 ஆண்டுகாலமாக ஏகாதிபத்திய ஆட்சி நடத்திய ஹுஸ்னி முபாரக்கின் சொத்துக்களை முடக்க வேண்டுமென அந்நாட்டின் மூத்த வழக்கறிஞர் இடைக்கால அரசிடம் கோரிக்கை விடுத்துள்ளார்.

இதுத்தொடர்பாக இதர நாடுகளுடன் தொடர்புக்கொண்டு ஆவனச் செய்யவேண்டுமன ப்ராஸ்க்யூட்டர் ஜெனரல் அப்துல் மஜீத் முஹம்மத் எகிப்தின் வெளிநாட்டு விவகார அமைச்சரிடம் வேண்டுகோள் விடுத்துள்ளார்.

முபாரக், அவருடைய மனைவி, இரண்டு மகன்கள், இரு மருமகள்கள் மற்றும் உறவினர்களின் சொத்துக்களை முடக்க வேண்டுமன அப்துல் மஜீத் முஹம்மத் வலியுறுத்தியுள்ளார்.

30 வருட ஏகாதிபத்திய ஆட்சியில் முபாரக்கும் அவரது குடும்பத்தினரும் ஊழல் மற்றும் மோசடி மூலமாக ஏராளமான சொத்துக்களை குவித்துள்ளதாக கருதப்படுகிறது.

இதற்கிடையே தஹ்ரீர் சதுக்கத்தில் அமைந்துள்ள எகிப்தின் அருங்காட்சியகம் மற்றும் வரலாற்றுச் சிறப்புமிக்க மையங்களும் திறக்கப்பட்டுள்ளன. வெளிநாட்டு சுற்றுலா பயணிகளை அருங்காட்சியக பணியாளர்கள் பூச்செண்டு கொடுத்து வரவேற்றனர்.

மக்கள் எழுச்சிப் போராட்ட வேளையில் வரலாற்றுச் சிறப்புமிக்க சில பொருட்கள் கொள்ளையடிக்கப்பட்டன. மேலும் சில பொருட்கள் சேதப்படுத்தப்பட்டன.எகிப்து சுற்றுலாத்துறைக்கு போராட்டக் காலக்கட்டத்தில் 80கோடி டாலரின் இழப்பு ஏற்பட்டுள்ளதாக மதிப்பிடப்பட்டுள்ளது.

செய்தி:தேஜஸ் மலையாள நாளிதழ்

Digg Google Bookmarks reddit Mixx StumbleUpon Technorati Yahoo! Buzz DesignFloat Delicious BlinkList Furl

0 கருத்துகள்: on "எகிப்து:முபாரக்கின் சொத்துக்களை முடக்க கோரிக்கை"

கருத்துரையிடுக