21 பிப்., 2011

39 மனைவிகளைக்​ கொண்ட உலகின் மிகப்பெரிய குடும்பத்தி​ற்கு சொந்தக்கார​ரான இந்தியர்

ஐஸோல்,பிப்:இச்செய்தியை வாசிப்பவர்கள் நம்புவதற்கு கஷ்டமாகத்தான் இருக்கும். ஒரு மனைவியை கட்டியே ஒழுங்காக குடும்பம் நடத்த முடியவில்லை என அங்கலாய்ப்பவர்கள் நம்மில் பலருண்டு. ஆனால் சியோன்னா சனாவுக்கு இதைப் பற்றியெல்லாம் கவலையே இல்லை. இந்தியாவின் மிஸோராம் மாநிலத்தைச் சார்ந்த சியோன்னா சனாவுக்கு 39 மனைவிகள், 94 பிள்ளைகள், 33 பேரக் குழந்தைகள். மிஸாராமிற்கு வடக்கே அழகான கிராமமான பக்துவாங்கில் மலைகளுக்கிடையே அமைந்துள்ள வீட்டில் மகிழ்ச்சிகரமான வாழ்க்கையை நடத்திவருகிறார் சனா.

நான்கு மாடிகளைக் கொண்ட 100 அறைகள் இடம்பெற்ற மிகப்பெரிய வீட்டில்தான் சனாவின் மிகப்பெரிய குடும்ப வாழ்க்கை தொடர்கிறது. இந்த வீட்டிற்கு பெயர், 'சுவான் தாட் ரன்' (புதிய தலைமுறையின் வீடு) என பெயரிடப்பட்டுள்ளது. ராணுவ ஒழுங்குமுறைகள் குடும்ப உறுப்பினர்களிடம் பேணப்படுகிறது. மிகவும் இளைய மனைவியான ஸாதியாங்கிதான் பெண்களைக் கொண்டு வீட்டில் துணிகளைக் கழுவுவது, சுத்தமாக்குவது போன்ற வேலைகளை செய்யவேண்டிய பொறுப்பு.

ஒரு தினத்திற்கான சாப்பாட்டிற்கு 30 கோழிகள் தேவைப்படுகின்றன. தனது முறுக்கேறிய வாலிப பருவத்தில் இவர் ஒரு வருடத்தில் 10 திருமணங்களை முடித்துள்ளார். மிக இளவயதுடைய மனைவிக்குத்தான் சனாவின் அடுத்துள்ள அறையில் தங்குவதற்கு அனுமதி. மூத்த மனைவியோ கடைசி அறையில் தங்கியுள்ளார்.

இதில் ஆச்சரியப்படத்தக்க செய்தி என்னவெனில், தனது குடும்பத்தை இன்னும் விரிவுப்படுத்த தான் அமெரிக்கா சென்றும் திருமணம் முடிக்கத் தயார் என சனா கூறுவதுதான்.

செய்தி:மாத்யமம்

Digg Google Bookmarks reddit Mixx StumbleUpon Technorati Yahoo! Buzz DesignFloat Delicious BlinkList Furl

0 கருத்துகள்: on "39 மனைவிகளைக்​ கொண்ட உலகின் மிகப்பெரிய குடும்பத்தி​ற்கு சொந்தக்கார​ரான இந்தியர்"

கருத்துரையிடுக