14 பிப்., 2011

அல்ஜீரிய மக்கள் எழுச்சி: 400 பேர் கைது

அல்ஜீர்ஸ்,பிப்.14:அரசுத் தடையை மீறி ஆயிரக்கணக்கானோர் பங்கேற்ற எதிர்ப்பு பேரணி நடந்த அல்ஜீரியாவில் 400-க்கும் அதிகமானோர் கைதுச் செய்யப்பட்டுள்ளனர். கைதுச் செய்யப்பட்டவர்களின் வெளிநாட்டு பத்திரிகையாளர்களும் அடங்குவர் என அல்ஜீரியன் லீக் ஃபார் டிஃபன்ஸ் ஆஃப் ஹியூமன் ரைட்ஸ் தலைவர் அலி யஹ்யா அப்துந்நூர் தெரிவித்துள்ளார்.

கடந்த சனிக்கிழமை ஜனநாயக உரிமைகளைக்கோரி போராட்டம் நடத்தியவர்களை போலீஸ் விரட்டியடித்தது. அதிபர் அப்துல் அஸீஸ் வெளியேற வேண்டுமென போராட்டத்தில் ஈடுபட்ட மக்கள் கோரிக்கை விடுத்தனர்.

1992-ஆம் ஆண்டு முதல் அவசரச்சட்டம் அமுலிருக்கும் அல்ஜீரியாவில் போராட்டங்கள் நடத்த தடை விதிக்கப்பட்டுள்ளது.

போராட்டம் முதல் கட்ட வெற்றியைப் பெற்றுள்ளது
10 வருடங்களுக்கும் மேலாக ஒன்றாக குரல் கொடுக்க அஞ்சிய மக்கள் வீதியிலிறங்கி போராட தயாரானதே வெற்றிதான் என சோசியலிஸ்ட் ஃபோர்ஸஸ் பார்டியின் முன்னாள் தலைவர் அலி ராஷிதி தெரிவித்துள்ளார்.

சனிக்கிழமை நடந்த போராட்டத்தில் 10 ஆயிரம் பேர் பங்கேற்றனர். ஆனால், இவர்களை எதிர்கொள்ள 30 ஆயிரம் போலீஸாரை அரசு பாதுகாப்பிற்கு நிறுத்தியிருந்தது.

துனீஷியா மற்றும் எகிப்தில் நடந்த மக்கள் புரட்சி ஏற்படுத்திய உத்வேகம் 10 ஆண்டுகளுக்கும் மேலாக தொடரும் அரசின் ராஜினாமாவுக்காக முழக்கமிட வீதியிலிறங்கி போராட அல்ஜீரிய மக்களை தூண்டியுள்ளது. லட்சியத்தை அடையாமல் போராட்டத்திலிருந்து வாபஸ் பெறுவதற்கான எண்ணமே இல்லை என கோ ஆர்டினேசன் ஃபார் டெமோக்ரேடிக் சேஞ்ச் இன் அல்ஜீரியா செயலாளர் ஜெனரல் ஃபாதில் பாமலேஹ் தெரிவித்துள்ளார்.

செய்தி:தேஜஸ் மலையாள நாளிதழ்

Digg Google Bookmarks reddit Mixx StumbleUpon Technorati Yahoo! Buzz DesignFloat Delicious BlinkList Furl

0 கருத்துகள்: on "அல்ஜீரிய மக்கள் எழுச்சி: 400 பேர் கைது"

கருத்துரையிடுக