வாஷிங்டன்,பிப்.14:அமெரிக்க ராணுவ கமாண்டர் அட்மிரல் மைக் முல்லன் நேற்று இஸ்ரேலுக்கு வருகைத் தந்துள்ளார்.
எகிப்து நாட்டு சர்வாதிகாரி ஹுஸ்னி முபாரக்கின் வீழ்ச்சிக்குப் பிறகு பிராந்தியத்தில் நிலைமைகளை ஆராய இவ்வருகை எனக் கூறப்படுகிறது.
இஸ்ரேல் சுற்றுப் பயணத்திற்கு பிறகு மைக் முல்லன் இன்று ஜோர்டான் மன்னர் அப்துல்லாஹ்வுடனும், அந்நாட்டு ராணுவ தலைமைத் தளபதி மெஸ்ஹால் அல் ஸப்னத்துடனும் பேச்சுவார்த்தை நடத்துவார்.
ஜோர்டானில் அரசுக்கெதிரான மக்கள் திரள் போராட்டம் நடைபெறும் வேளையில்தான் முல்லனின் வருகை என்பது குறிப்பிடத்தக்கது.
இஸ்ரேல் பிரதமர் நெதன்யாகும், அதிபர் ஷிமோன் பிரஸ் மற்றும் ராணுவ தளபதிகளுடனும் முல்லன் பேச்சுவார்த்தை நடத்தியுள்ளார்.
அமெரிக்காவுடன் நல்ல நட்பை பேணிவரும் இந்நாடுகளின் பாதுகாப்பு விஷயங்களை முல்லன் அந்நாட்டு தலைவர்களுடன் விவாதிப்பார் எனவும், இருநாடுகளுக்கும் அமெரிக்கா அளித்துவரும் ஆதரவை உறுதிச்செய்யும் எனவும் பெண்டகன் செய்தித் தொடர்பாளர் கேப்டன் ஜான் கிர்பி தெரிவித்துள்ளார்.
முல்லான் ஐந்தாவது தடவையாக இஸ்ரேலுக்கு சென்றுள்ளார்.
செய்தி:தேஜஸ் மலையாள நாளிதழ்

0 கருத்துகள்: on "அமெரிக்க கமாண்டர் இஸ்ரேலுக்கு சென்றார்"
கருத்துரையிடுக