14 பிப்., 2011

டேவிற்கு தூதரக பாதுகாப்பு வழங்கக்கூடாது - குரைஷி

இஸ்லாமாபாத்,பிப்.14:பாகிஸ்தானில் இரண்டு பேரை சுட்டுக்கொன்ற அமெரிக்க தூதரக அதிகாரி ரேமண்ட் டேவிஸிற்கு தூதரக பாதுகாப்பை வழங்கக் கூடாது என அந்நாட்டு முன்னாள் வெளியுறவுத்துறை அமைச்சர் ஷா மஹ்மூத் குரைஷி வலியுறுத்தியுள்ளார்.

வெளியுறவுத்துறை அமைச்சகத்தின் வல்லுநர்களின் அபிப்ராயம் மற்றும் அதிகாரப்பூர்வ ஆவணங்களில் டேவிஸிற்கு தூதரக பிரதிநிதி அந்தஸ்து இல்லை என குரைஷி தெரிவித்துள்ளார்.

பாகிஸ்தானில் புதிதாக நியமிக்கப்பட்டுள்ள அமைச்சர்களில் தனது பெயர் இல்லை என்பதைத் தொடர்ந்து பதவியேற்பு விழாவில் கலந்துகொள்ளாமல் புறக்கணித்துள்ளார்.

அதேவேளையில் குரைஷியின் அறிக்கைக்கு பாகிஸ்தான் பீப்பிள்ஸ் பார்டி கண்டனம் தெரிவித்துள்ளது. குரைஷியின் அறிக்கை தவறான செய்தியை அளிக்கும். வெளியுறவுத்துறை அமைச்சராகயிருந்த பொழுது அவர் இத்தகைய கவலைகளை வெளிப்படுத்தவில்லை என செய்தி ஒலிபரப்பு அமைச்சர் ஃபிர்தவ்ஸ் ஆஷிக் அவான் தெரிவித்துள்ளார்.

புதிய அமைச்சரவையில் குரைஷிக்கு நீர், எரிசக்தி துறைகள் வழங்குவதாக பி.பி.பி கட்சி தீர்மானித்திருந்தது. ஆனால், வெளியுறவுத்துறை தான் வேண்டும் என்ற பிடிவாதத்தில் குரைஷி பதவியேற்பு விழாவில் பங்கேற்கவில்லை.

செய்தி:தேஜஸ் மலையாள நாளிதழ்

Digg Google Bookmarks reddit Mixx StumbleUpon Technorati Yahoo! Buzz DesignFloat Delicious BlinkList Furl

0 கருத்துகள்: on "டேவிற்கு தூதரக பாதுகாப்பு வழங்கக்கூடாது - குரைஷி"

கருத்துரையிடுக