கெய்ரோ,பிப்.3:எகிப்து நாட்டில் சர்வாதிகாரத்திற்கான புரட்சி போராட்டம் புதிய கட்டத்தை அடைந்துள்ளது. ஹுஸ்னி முபாரக்கின் ஆதரவாளர்களுக்கும், அரசுக்கெதிராக போராட்டம் நடத்திவரும் மக்களும் மோதியதில் 500 பேருக்கு காயம் ஏற்பட்டுள்ளது. தஹ்ரீர் சதுக்கத்தில் கடல் அலைபோல் திரண்டிருந்த மக்கள் கூட்டத்தின்மீது முபாரக் ஆதரவாளர்கள் தாக்குதலை நடத்தியதைத் தொடர்ந்து மோதல் உருவானது. தொடர்ந்து இரு தரப்பிலும் கல்வீச்சு நடைபெற்றது. இத்தகவலை அல்ஜஸீரா கூறுகிறது.
தஹ்ரீர் சதுக்கத்திற்குள் நுழைந்த முபாரக் ஆதரவாளர்களை ராணுவம் தடுக்காததால் மோதல் உருவானதாக கூறப்படுகிறது.
கம்பு மற்றும் கத்தியுடன் மக்கள் கூட்டத்தில் நுழைந்த முபாரக் ஆதரவாளர்கள் மக்களை தாக்கத் துவங்கினர். இரு கூட்டத்தினரும் அமைதி காக்குமாறு ஐ.நா சபை பொதுச்செயலாளர் பான் கீ மூன் வேண்டுகோள் விடுத்துள்ளார்.
ஒரு வாரத்திற்குமேலாக எகிப்தில் நடந்துவரும் போராட்டத்தில் இரு பிரிவினர்களுக்கிடையே நடைபெறும் முதல் மோதல் இதுவாகும். அடுத்த தேர்தலில் போட்டியிடமாட்டேன் என முபாரக் அறிவித்திருந்தாலும் அதனை ஒப்புக்கொள்ள மக்கள் தயாரில்லை.
சர்வாதிகார ஆட்சியை முடிவுக்குக் கொண்டுவந்து முபாரக் ராஜினாமாச் செய்யும்வரை போராட்டம் தொடரும் என புரட்சியாளர்கள் தெரிவித்துள்ளனர்.
முபாரக்கிற்கு எதிரான போராட்டத்தில் கலந்துகொள்வதற்காக குழந்தைகளைப் பெற்ற தாய்மார்கள் உள்பட லட்சக்கணக்கான மக்கள் தஹ்ரீர் சதுக்கத்தில் திரண்டுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கதாகும். நாட்டின் பல்வேறு நகரங்களிலும் போராட்டம் தீவிரமடைந்து வருகிறது.
செய்தி:மாத்யமம்

0 கருத்துகள்: on "எகிப்து:புரட்சியாளர்கள்-முபாரக் ஆதரவாளர்களிடையே மோதல் - 500 பேர் காயம்"
கருத்துரையிடுக