பிரெஸெல்ஸ்.பிப்.3:பதவி கவிழ்க்கப்பட்ட துனீசிய அதிபர் பென் அலி மற்றும் அவரது மனைவின் சொத்துகளை ஐரோப்பிய ஒன்றியம் முடக்கியுள்ளது.
துனீசியாவின் இடைக்கால அரசு விடுத்த வேண்டுகோளை அடுத்து ஐரோப்பிய ஒன்றிய வெளியுறவு அமைச்சர்கள் இதற்கான அங்கீகாரத்தை வழங்கியுள்ளனர்.
வறுமை மற்றும் ஊழலுக்கு எதிராக நாட்டுமக்கள் மேற்கொண்ட கடும் ஆர்ப்பாட்டங்களால் 23 வருட அதிகாரத்திலிருந்து பதவி கவிழ்க்கப்பட்ட பென் அலி தற்போது நாட்டைவிட்டு வெளியேறி சவூதி அரேபியாவில் தஞ்சமடைந்துள்ளார்.
பல வருடங்களாக நாட்டின் சொத்துகளை சுரண்டி தம்மை வளப்படுத்திக் கொண்டதாக பென் அலியின் மீதும் அவரது குடும்ப உறுப்பினர்கள் மீதும் குற்றஞ்சாட்டப்பட்டுள்ளது.
நாட்டின் பொருளாதாரத்தின் பெரும்பகுதி பென் அலியின் குடும்பம் மற்றும் அவரது உதவியாளர்களின் கட்டுப்பாட்டில் இருந்ததாகக் கூறப்படுகிறது.
பி.பி.சி.

0 கருத்துகள்: on "துனீசியா:பென் அலியின் சொத்துகளை முடக்கியது ஐரோப்பிய ஒன்றியம்"
கருத்துரையிடுக