25 பிப்., 2011

ஆப்கானில் நேட்டோ ராணுவத்தின் அராஜகம்: 5 அப்பாவி மக்கள் படுகொலை

காபூல்,பிப்.25:வடகிழக்கு ஆப்கானிஸ்தானில் அமெரிக்க தலைமையில் நேட்டோ படையினர் நடத்திய தாக்குதலில் ஐந்து அப்பாவிமக்கள் படுகொலைச் செய்யப்பட்டனர்.

போராளிகள் என சந்தேகித்து மூன்று பெண்களையும்,இரண்டு வயோதிகர்களையும் நேட்டோ ராணுவம் கொன்றதாக காபிஸா மாகாண தலைவர் முல்லா முஹம்மது உமரி தெரிவித்துள்ளார்.

தந்தையும் அவருடைய இரண்டு மகள்களும் கொல்லப்பட்டுள்ளதாக மாவட்ட நிர்வாகம் அறிவித்துள்ளது. மலைக்குன்றில் பறவை வேட்டையில் இக்குடும்பத்தினர் ஈடுபட்டிருந்தனர். பறவை வேட்டை தடைச் செய்யப்பட்ட பகுதியாகும் அது.

நேட்டோ இத்தாக்குதலைக் குறித்து பதில் அளிக்கவில்லை. நான்கு தினங்களுக்கிடையே குன்னார் மாகாணத்தில் நேட்டோ-ஆப்கான் ராணுவத்தினரின் வெறித்தனமான தாக்குதலில் 64 சாதாரண மக்கள்
கொல்லப்பட்ட செய்தி நேற்று முன்தினம் வெளியாகியிருந்தது.

சாதாரண மக்கள் கொலைச்செய்யப்படுவது ஆப்கான் - அமெரிக்க உறவில் கீறலை ஏற்படுத்தியுள்ளது.

செய்தி:தேஜஸ் மலையாள நாளிதழ்

Digg Google Bookmarks reddit Mixx StumbleUpon Technorati Yahoo! Buzz DesignFloat Delicious BlinkList Furl

0 கருத்துகள்: on "ஆப்கானில் நேட்டோ ராணுவத்தின் அராஜகம்: 5 அப்பாவி மக்கள் படுகொலை"

கருத்துரையிடுக