லண்டன்,பிப்.25:விக்கிலீக்ஸ் ஸ்தாபகர் ஜூலியன் அஸாஞ்சேவை சுவீடன் நாட்டிடம் ஒப்படைக்குமாறு லண்டன் பெல்மார்ஷ் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
இரண்டு பெண்களை பாலியல்ரீதியாக கொடுமைச் செய்தார் என அஸாஞ்சே மீது சுவீடன் நாட்டில் வழக்குத் தொடரப்பட்டு கைது வாரண்ட் பிறப்பிக்கப்பட்டிருந்தது. இதுத் தொடர்பாக விசாரணை நடத்துவதற்கு அஸாஞ்சேவை தங்களிடம் ஒப்படைக்குமாறு சுவீடன் பிரிட்டனின் உதவியை நாடியிருந்தது.
இவ்வழக்கில் ஏற்கனவே இரண்டு தினங்களுக்கும் மேலாக வாதங்களை கேட்ட பெல்மார்ஷ் நீதிமன்ற நீதிபதி ஹவார்டு ரிடில் நேற்று இதுத்தொடர்பான உத்தரவை பிறப்பித்தார்.
இரண்டு பெண்களை பாலியல் ரீதியாக கொடுமைப்படுத்தியது விசாரணைக்காக ஒப்படைக்கும் அளவிலான குற்றமா? சுவீடனின் கைது வாரண்ட் சாதாரணமான முறையில் பிறப்பிக்கப்பட்டதா? என்பதைக் குறித்து நீதிபதி ஆராய்ந்தார்.
சுவீடனில் அஸாஞ்சேவுக்கு நீதியான முறையில் விசாரணை நடக்காது என்ற அஸாஞ்சேவுடைய வழக்கறிஞரின் வாதத்தை நீதிபதி ரிடில் தள்ளுபடிச் செய்தார்.
அதேவேளையில், பெல்மார்ஷ் நீதிமன்றத்தின் தீர்ப்பிற்கு எதிராக உயர்நீதிமன்றத்தை அணுகப் போவதாக அஸாஞ்சேவின் வழக்கறிஞர் அறிவித்துள்ளார்.
செய்தி:தேஜஸ் மலையாள நாளிதழ்

0 கருத்துகள்: on "அஸாஞ்சேவை சுவீடனிடம் ஒப்படைக்க நீதிமன்றம் உத்தரவு"
கருத்துரையிடுக