கெய்ரோ,பிப்.14:குற்றங்கள் மற்றும் ஊழலினால் எகிப்து நாட்டிற்கு ஹுஸ்னி முபாரக்கின் ஆட்சியில் கடந்த 2000-2008 காலக்கட்டத்தில் ஆண்டுக்கு 6 பில்லியன் டாலர் (இந்திய பண மதிப்பில் 27 ஆயிரத்து 360 கோடி ரூபாய்) இழப்பு ஏற்பட்டுள்ளதாக குளோபல் ஃபினான்ஷியல் இன்டிகிரிடி வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியுள்ளது.
வாஷிங்டனை மையமாகக் கொண்டு செயல்படும் வாட்ச்டாக் க்ரூப்பின்(ஒரு குறிப்பிட்ட சேவையைக் குறித்து அரசு அல்லது நிறுவனங்களின் நடவடிக்கையை கண்காணிக்கும் குழுமம்) ஆவணங்களின்படி எகிப்திலிருந்து ஊழல், குற்றம் மற்றும் வரி ஏய்ப்பினால் அதிகளவிலான பணம் வெளியேறியுள்ளதாக தெரியவருகிறது.
சமீபத்திய அறிக்கை ஒன்று குறிப்பிடுகையில், மத்திய கிழக்கு மற்றும் எகிப்து உள்பட வட ஆப்பிரிக்க பிராந்தியத்திலிருந்து சட்டத்திற்கு புறம்பான வகையில் நிதி வெளிச்சென்றுள்ளதாக கூறப்பட்டுள்ளது.
அறிக்கையை தயாரித்துள்ள டேவ் கர் தெரிவிக்கையில், "பலகீனமான ஆட்சியின் காரணமாக அதிகளவிலான வழிப்பறை, திருட்டு, குற்றம் மற்றும் வரி ஏய்ப்பினால் பில்லியன் டாலர்கள் ஒவ்வொரு ஆண்டும் எகிப்தை விட்டு சட்டத்திற்கு புறம்பாக வெளியேறுகின்றன" என்றார்.
செய்தி:ikhwanweb

0 கருத்துகள்: on "ஹுஸ்னி முபாரக்கின் ஆட்சியில் எகிப்திற்கு ஊழலினால் ஆண்டுக்கு 6 பில்லியன் டாலர் இழப்பு"
கருத்துரையிடுக