மும்பை,பிப்.14:புனே ஜெர்மன் பேக்கரி குண்டுவெடிப்பு நடைபெறுவதற்கு சில வாரங்களுக்கு முன்பே மஹராஷ்ட்ரா தீவிரவாத எதிர்ப்பு படையினர் தன்னை கைதுச் செய்தனர் என இவ்வழக்கில் முக்கிய குற்றவாளியாக ஏ.டி.எஸ் கூறும் ஹிமாயத் பேக் தெரிவித்துள்ளார்.
ஹிமாயத் பேக்கின் இக்கூற்று புலனாய்வு ஏஜன்சிக்கு சிக்கலை ஏற்படுத்தியுள்ளது. புனே ஜெர்மன் பேக்கரியில் வெளிநாட்டினர் உள்பட 17 பேர் கொல்லப்பட்ட சம்பவத்தில் ஹிமாயத் பேக்கை முக்கியக் குற்றவாளியாக்கி ஏ.டி.எஸ் குற்றப்பத்திரிகையை சமர்ப்பித்திருந்தது.
சாதாரண பிரிவுகளில் குற்றஞ்சுமத்தி ஹிமாயத் பேக்கை குண்டுவெடிப்பு நிகழ்வதற்கு சில வாரங்களுக்கு முன்பே மும்பை தீவிரவாத எதிர்ப்புப் படையினர் கைதுச் செய்ததாக பேக் தெரிவித்தார் என அவருடைய வழக்கறிஞர் ரஹ்மான் தெரிவித்துள்ளார்.
குண்டுவெடிப்பிற்கு பிறகு வந்த இ-மெயில் செய்தியின் மூலம் லஷ்கர்-இ-தய்யிபா என நிரூபணமானதாக ஏ.டி.எஸ் கூறுகிறது.
குண்டுவெடிப்பு நிகழ்ந்து முதல் ஆண்டு நிறைவுறுவதையொட்டி புனேயில் நேற்று கொல்லப்பட்டவர்களுக்கு அஞ்சலி செலுத்தும் விதமாக மெழுவர்த்தி ஏந்திய அமைதி பேரணி நடைபெற்றது.
செய்தி:தேஜஸ் மலையாள நாளிதழ்

0 கருத்துகள்: on "புனே குண்டுவெடிப்பு நிகழும்பொழுது நான் சிறையிலிருந்தேன் - குற்றஞ்சாட்டப்பட்ட ஹிமாயத் பேக்"
கருத்துரையிடுக