14 பிப்., 2011

அருண் சோரிக்கு சி.பி.ஐ சம்மன்

புதுடெல்லி,பிப்:ஐக்கிய முற்போக்குக் கூட்டணி அரசை ஆட்டிப்படைத்து வரும் ஸ்பெக்ட்ரம் ஊழல் பா.ஜ.கவையும் தொற்றிக்கொண்டது.

வாஜ்பாய் அமைச்சரவையில் தகவல் தொடர்பு அமைச்சராக பதவி வகித்த அருண் சோரிக்கு 2ஜி ஸ்பெக்ட்ரம் ஊழல் தொடர்பாக விசாரணை நடத்துவதற்கு சி.பி.ஐ சம்மன் அனுப்பியுள்ளது.

விசாரணை நடத்துவதற்கு வருகிற 21-ஆம் தேதி டெல்லியில் சி.பி.ஐ தலைமையகத்தில் ஆஜராக அருண்சோரிக்கு சம்மன் அனுப்பப்பட்டுள்ளது.

ஸ்பெக்ட்ரம் அலைக்கற்றைகள் விநியோகித்தலைக் குறித்து விசாரணை நடத்திய நீதிபதி சிவராஜ்பாட்டீல் கமிட்டி பா.ஜ.கவின் ஆட்சியின்போதே சட்டவிரோதமாக ஸ்பெக்ட்ரம் லைசென்ஸ் வழங்கப்பட்டதாக தனது அறிக்கையில் கூறியிருந்தது. இதன் மூலம் கிடைத்த ஆதாரங்களின் அடிப்படையில் சி.பி.ஐ அருண்சோரியை விசாரிக்க சம்மன் அனுப்பியுள்ளது.

பா.ஜ.க தலைமையிலான தேசிய ஜனநாயக முன்னணி அரசில் 2003 ஜனவரி முதல் 2004 மே மாதம் வரை அருண்சோரி தகவல் தொடர்பு அமைச்சராக பதவி வகித்தார்.

இதற்கிடையே பா.ஜ.க தலைவர்கள் மீது ஸ்பெக்ட்ரம் ஊழல் தொடர்பாக குற்றஞ்சாட்டி களமிறங்கியுள்ளார் அருண்ஷோரி. ஸ்பெக்ட்ரம் ஊழலைக் குறித்து பிரதமரிடம் தெரிவிக்கும் முன்பே கட்சித் தலைவர்களான அருண்ஜெட்லி, சுஷ்மா சுவராஜ் ஆகியோரிடம் தெரிவித்ததாகவும், ஆனால் அவர்கள் நான் கூறிய தகவல்களை புறக்கணித்துவிட்டார்கள் என அருண்ஷோரி சி.என்.என் - ஐ.பி.என் சேனலுக்கு அளித்துள்ள பேட்டியில் கூறியுள்ளார்.

அரசுக்கு நெருக்கடியை கொடுக்க மக்களவை எதிர்கட்சித் தலைவர் சுஷ்மா சுவராஜும், மாநிலங்களவை எதிர்கட்சித் தலைவர் அருண் ஜெட்லியும் சுய லாபங்களுக்காக முன்வரவில்லை. ஆனால் அ.இ.அ.தி.மு.க உறுப்பினர்கள் மட்டுமே ஸ்பெக்ட்ரம் ஊழலுக்கு முக்கியத்துவம் அளித்தனர் என அருண்ஷோரி கூறியுள்ளார்.

ஸ்பெக்ட்ரம் ஊழல் பா.ஜ.கவுக்கு எதிராக திரும்பியுள்ளதை வருகிற பாராளுமன்ற பட்ஜெட் கூட்டத்தொடரில் அக்கட்சிக்கு எதிரான ஆயுதமாக காங்கிரஸ் பயன்படுத்தும். முன்னாள் தகவல் தொடர்பு அமைச்சர் ஆ.ராசாவை சி.பி.ஐ கைதுச் செய்துள்ளதால் சி.பி.ஐயின் நடவடிக்கை அரசியல் தூண்டுதல் எனக்கூற பா.ஜ.கவால் இயலாது. இது பா.ஜ.கவுக்கு நெருக்கடியை ஏற்படுத்தும் எனக் கூறப்படுகிறது.

செய்தி:தேஜஸ் மலையாள நாளிதழ்

Digg Google Bookmarks reddit Mixx StumbleUpon Technorati Yahoo! Buzz DesignFloat Delicious BlinkList Furl

0 கருத்துகள்: on "அருண் சோரிக்கு சி.பி.ஐ சம்மன்"

கருத்துரையிடுக