22 பிப்., 2011

நியூசிலாந்தில் பூகம்பம், பலர் பலி - ரிக்டர் அளவில் 6.3 ஆக பதிவு

கிறிஸ்ட்சர்ச்,பிப்.22:நியூசிலாந்தில் இன்று காலை சக்தி வாய்ந்த பூகம்பம் தாக்கியது. இதில் பல கட்டடங்கள் இடிந்து சேதமடைந்தன. அதில் சிக்கி பலர் பலியாகியிருப்பதாக தகவல்கள் கூறுகின்றன. பூகம்பம் தாக்கியதைத் தொடர்ந்து கிறிஸ்ட்சர்ச் நகர விமான நிலையம் மூடப்பட்டது. இன்று காலை கிறிஸ்ட்சர்ச் நகருக்கு அருகே 6.3 ரிக்டர் அளவிலான பூகம்பம் தாக்கியது.

இந்த பூகம்பத்தால் பல கட்டடங்கள் இடிந்து தரைமட்டமாகியுள்ளன. பயங்கர நிலநடுக்கத்தால் 65 பேர் உயிரிழந்தனர். நூற்றுக்கணக்கானோர் பலத்த காயமடைந்தனர். ஏராளமான கட்டடங்கள் இடிந்து தரைமட்டமாகின. கட்டட இடிபாடுகளுக்குள் பலர் சிக்கி உள்ளதால் பலி எண்ணிக்கை உயரும் என்று அஞ்சப்படுகிறது.

அதில் சிக்கி பலர் பலியாகியிருப்பதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. பலர் இடிபாடுகளில் சிக்கித் தவிப்பதாகவும் கூறப்படுகிறது. ஏராளமான வீடுகள், வணிக நிறுவனங்கள் இடிந்துள்ளன.

ஆங்கிலிகன் கதீட்ரல் என்ற நகரின் பழமையான சர்ச் முற்றிலும் தரைமட்டமாகியுள்ளது. சாலைகள் பிளவுபட்டுள்ளன. பூகம்பம் தாக்கிய பகுதிகளில் உள்ள கட்டடங்களிலிருந்து மக்கள் பாதுகாப்பான இடங்களுக்கு அப்புறப்படுத்தப்பட்டு வருகின்றனர்.

கிறிஸ்ட்சர்ச் விமான நிலையம் உடனடியாக மூடப்பட்டு விட்டது. அனைத்து விமானங்களும் ரத்து செய்யப்பட்டுள்ளன. பயணிகள் பாதுகாப்பான இடங்களுக்குக் கொண்டு செல்லப்பட்டுள்ளனர்.

உள்ளூர் நேரப்படி மதியம் 12.51 மணிக்கு இந்த பூகம்பம் தாக்கியது. இது ஏற்பட்ட 10 நிமிடங்கள் கழித்து 5.6 ரிக்டர் அளவிலான நில அதிர்வும் ஏற்பட்டது. முழுமையான சேத விவரம், பலி விவரம் தெரிய வரவில்லை.

"இது நியூசிலாந்தின் கறுப்பு தினம்; மிகவும் மோசமான நாள்' என்று நிலநடுக்கம் குறித்து கருத்து தெரிவித்த அந்நாட்டு பிரதமர் ஜான் லீ, மீட்புப் பணிகளை விரைந்து மேற்கொள்ளுமாறு கேட்டுக்கொண்டுள்ளார்.

Digg Google Bookmarks reddit Mixx StumbleUpon Technorati Yahoo! Buzz DesignFloat Delicious BlinkList Furl

0 கருத்துகள்: on "நியூசிலாந்தில் பூகம்பம், பலர் பலி - ரிக்டர் அளவில் 6.3 ஆக பதிவு"

கருத்துரையிடுக