22 பிப்., 2011

கோத்ரா:இன்று தீர்ப்பு


அஹ்மதாபாத்,பிப்.22:கோத்ரா ரெயில் எரிப்பு வழக்குத் தொடர்பாக இன்று அஹ்மதாபாத் நீதிமன்றத்தில் தீர்ப்பு வெளியிடப்படவுள்ளது.

குஜராத் மாநிலம் கோத்ராவில் கடந்த 2002-ஆம் ஆண்டு பிப்ரவரி மாதம் 27-ஆம் தேதியன்று சபர்மதி எக்ஸ்பிரஸ் ரயில் வந்துக் கொண்டிருந்தது. அப்பொழுது ஒரு மர்மக் கும்பல் ரெயிலுக்கு தீ வைத்ததில் 58 பேர் கொல்லப்பட்டனர்.

இச்சம்பவத்தில் முஸ்லிம்கள் மீது குற்றஞ்சாட்டி பல்லாயிரக்கணக்கான அப்பாவி முஸ்லிம்கள் கர்ணக் கொடூரமாக கொலைச் செய்யப்பட்டனர். இந்த இனப்படுகொலை மோடியுடன் ஆசீர்வாதத்துடன் நடத்தப்பட்டுள்ளது. இதனை சுப்ரீம் கோர்ட் நியமித்த சிறப்புபுலனாய்வு குழுவின் அறிக்கையிலும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில் கோத்ரா ரெயில் எரிப்புத் தொடர்பான வழக்கில் தீர்ப்பு இன்று வெளியாக உள்ளது. வெளியிலுள்ள நபர்கள்தாம் ரெயிலுக்கு தீவைத்தாக நானாவதி கமிஷன் கூறுகிறது. ஆனால் ரெயில்வேத் துறையால் நியமிக்கப்பட்ட பானர்ஜி கமிஷன் ரெயில் எரிப்பிற்கு காரணம் அதன் உள்புறத்திலிருந்து பயன்படுத்தப்பட்ட எரிபொருள்தான் எனக் கூறியிருந்தது.

இவ்வழக்கில் கடந்த 2009-ஆம் ஆண்டு ஜூன் மாதம் விசாரணைத் துவங்கியது. இவ்வழக்கில் கைதுச் செய்யப்பட்ட 94 பேர் 2002 ஆம் ஆண்டு முதல் தீவிர பாதுகாப்பில் சிறையிலடைக்கப்பட்டுள்ளனர்.

Digg Google Bookmarks reddit Mixx StumbleUpon Technorati Yahoo! Buzz DesignFloat Delicious BlinkList Furl

0 கருத்துகள்: on "கோத்ரா:இன்று தீர்ப்பு"

கருத்துரையிடுக