22 பிப்., 2011

மலேகான் குண்டுவெடிப்பை நிகழ்த்த ராணுவத்தின் 'பங்கர் டெமோலிஷன் டெக்னிக்'

புதுடெல்லி,பிப்.22:கடந்த 2006-ஆம் ஆண்டு மலேகானில் குண்டுவெடிப்பை நிகழ்த்த ராணுவத்தின் 'பங்கர் டெமோலிஷன் டெக்னிக்' பயன்படுத்தப்பட்டுள்ளது என புலனாய்வில் தெரியவந்துள்ளது.

சிறிய அளவிலான குண்டுவெடிப்புகளுக்குக் கூட பெரிய அளவிலான அழிவுகளை ஏற்படுத்த இந்த தொழில்நுட்பத்தால் இயலும்.

வார்ப்பிரும்பு பைப்புகளை(caste-iron) பரஸ்பரம் பிரித்தெடுத்து அதில் ஆர்.டி.எக்ஸ், அமோனியம் நைட்ரேட், எரிபொருள் எண்ணை ஆகியவற்றை பயன்படுத்தி இந்த குண்டு தயாரிக்கப்படுகிறது. இத்தகைய வார்ப்பிரும்பு பைப்புகளை ராணுவம் மட்டுமே உபயோகிக்கிறது. ஆர்.டி.எக்ஸ், அமோனியம் நைட்ரேட், எரி
எண்ணைய் ஆகியவற்றை சேர்த்து குண்டு தயாரிப்பது ராணுவம் மட்டுமே என ஃபாரன்சிக் புலனாய்வு அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

இதைப்போன்று வார்ப்பிரும்பை உபயோகித்து மக்கா மஸ்ஜித் மற்றும் அஜ்மீர் தர்கா குண்டுவெடிப்புகள் நிகழ்த்தப்பட்டதாக புலனாய்வு அதிகாரிகள் கண்டறிந்தனர். 9 இஞ் சிறு குறைவான கனமுடைய பைப்புகளை உபயோகித்து குண்டு தயாரிக்கப்பட்டுள்ளது.

வெளிநாட்டு பயிற்சி பெற்றவர்களால்தான் இத்தகைய குண்டுகளை நிர்மாணிக்க இயலும் என புலனாய்வு அதிகாரிகள் தெரிவிக்கின்றனர். மஹாராஷ்ட்ரா தீவிரவாத எதிர்ப்பு படையினர் வசமிருந்த ஆதாரங்கள் வழக்கு விசாரணையை தொடங்கிய உடனேயே கிடைத்ததாக சி.பி.ஐ வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

மலேகான் குண்டுவெடிப்பில் முன்பு முஸ்லிம் இளைஞர்கள அநியாயமாக கைது செய்யப்பட்டிருந்தனர். தற்போதும் அவர்கள் சிறையில்தான் அடைக்கப்பட்டுள்ளனர். இந்நிலையில் அஸிமானந்தா அளித்த வாக்குமூலத்தில் மலேகான் உள்பட இந்தியாவில் நடந்த பல்வேறு குண்டுவெடிப்புகளில் ஹிந்துத்துவா பயங்கரவாதிகளுக்கு பங்கிருப்பது தெரியவந்தது.

இதனைத் தொடர்ந்து மலேகான் குண்டுவெடிப்பு விசாரணையை மீண்டும் நடத்த மத்திய அரசு தீர்மானித்தது. இரண்டாவது மலேகான் குண்டுவெடிப்பின் முக்கிய குற்றவாளியான ஹிந்துத்துவா பயங்கரவாதி கர்னல் ஸ்ரீகாந்த் புரோகித்துதான் மலேகான் குண்டுவெடிப்பிற்காக சதித்திட்டம் தீட்டியதாக அஸிமானந்தா வாக்குமூலம் அளித்திருந்தான்.

செய்தி:தேஜஸ் மலையாள நாளிதழ்

Digg Google Bookmarks reddit Mixx StumbleUpon Technorati Yahoo! Buzz DesignFloat Delicious BlinkList Furl

0 கருத்துகள்: on "மலேகான் குண்டுவெடிப்பை நிகழ்த்த ராணுவத்தின் 'பங்கர் டெமோலிஷன் டெக்னிக்'"

கருத்துரையிடுக