22 பிப்., 2011

டெல்லியை விட்டு வெளியேறக் கூடாது - கிலானிக்கு போலீஸ் உத்தரவு - கஷ்மீரில் இன்று முழு அடைப்பு

புதுடெல்லி,பிப்.22:அனுமதியில்லாமல் டெல்லியை விட்டு வெளியேறக் கூடாது என தெஹ்ரீக்-இ-ஹூர்ரியத் கட்சியின் தலைவர் செய்யத் அலிஷா கிலானிக்கு டெல்லி போலீஸ் உத்தரவிட்டுள்ளது.

கிலானிக்கு எதிரான நடவடிக்கையை கண்டித்து கஷ்மீரில் இன்று முழு அடைப்பிற்கு ஹுர்ரியத் சார்பில் அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.

கடந்த ஞாயிற்றுக்கிழமை கிலானியிடம் டெல்லியை விட்டுச் செல்லக்கூடாது என போலீஸ் உத்தரவிட்டது. மாளவியா நகரில் அவர் வசிக்கும் வீட்டிற்கு முன்பு போலீஸ் காவல் போடப்பட்டுள்ளது. டெல்லியை விட்டு செல்லுமுன், ஹூர்ரியத்துடன் தொடர்புடைய ஹவாலா வழக்கில் விசாரணைக்கு ஆஜராக வேண்டுமென ஏற்கனவே போலீஸ் உத்தரவிட்டிருந்தது. இதனை கிலானியும் ஒப்புக்கொண்டார்.

மத்திய அரசு நியமித்த மத்தியஸ்தர் குழு கிலானியுடன் பேச்சுவார்த்தை நடத்த விருப்பம் தெரிவித்து அவருக்கு கடிதம் அளித்ததற்கு பின்னர் தலைநகரை விட்டுச் செல்லக்கூடாது என டெல்லி போலீஸ் உத்தரவிட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

சிறுநீரகம் தொடர்பான நோய் காரணமாக சிகிட்சைக்காக கடந்த மாதம் 27-ஆம் தேதி முதல் டெல்லியில் வசித்துவருகிறார் கிலானி.

டெல்லியில் முன்னர் நடந்த கருத்தரங்கில் தேசவிரோதமாக உரை நிகழ்த்தியதாக எழுத்தாளர் அருந்ததிராய் மற்றும் கிலானிக்கு எதிராக வழக்கு பதிவுச் செய்யப்பட்டது. இந்த வழக்கு தொடர்பாகத்தான் கிலானிக்கு புதிய உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளதாக கருதப்படுகிறது. ஆனால், போலீஸ் இதனை மறுத்துள்ளது. இத்தகையதொரு உத்தரவு பிறப்பிக்கவில்லை என டெல்லி போலீஸ் கூடுதல் கமிஷனர் கெ.சி.திவேதி தெரிவித்துள்ளார்.

கிலானிக்கு எதிரான நடவடிக்கையை கண்டித்து இன்று கஷ்மீரில் முழு அடைப்பு நடத்த தெஹ்ரீக்-இ-ஹுர்ரியத்தின் செய்தித் தொடர்பாளர் அயாஸ் அக்பர் ஸ்ரீநகரில் தெரிவித்தார். ஒரே நேரத்தில் அவரை பேச்சுவார்த்தைக்கு அழைப்பதும், மறுபுறம் அவருடைய செயல்பாடுகளை தகர்க்குவதற்கும் மத்திய அரசு முயல்வதாக அயாஸ் அக்பர் குற்றஞ்சாட்டினார்.

கஷ்மீர் மத்தியஸ்தர் குழு பேச்சுவார்த்தைக்கு கடிதம் அளித்ததைத் தொடர்ந்து அக்காரியத்தில் தீர்மானம் எடுக்க கிலானி நாளை ஸ்ரீநகரில் நடத்தவிருக்கும் ஆலோசனைக் கூட்டத்தில் கலந்துக் கொள்ளவிருந்தார்.

டெல்லியை விட்டு வெளியேற அனுமதிக்காததால் இக்காரியம் தற்பொழுது சந்தேகத்திலாகும். ஹவாலா பணத்துடன் மூன்று கஷ்மீரிகள் டெல்லியில் கைது செய்யப்பட்டதுத் தொடர்பாக விசாரணை அதிகாரிகள் முன்பு ஆஜராக போலீஸ் கிலானிக்கு உத்தரவு பிறப்பித்தது. கிலானிக்கு தேவையான பணம்தான் இது என அவர்கள் வாக்குமூலம் அளித்ததாக போலீஸ் கூறுகிறது.

கைது செய்யப்பட்டவர்கள் டெல்லி போலீஸின் ஸ்பெஷல் பிரிவிடம்
ஒப்படைக்கப்பட்டுள்ளனர்.

செய்தி:தேஜஸ் மலையாள நாளிதழ்

Digg Google Bookmarks reddit Mixx StumbleUpon Technorati Yahoo! Buzz DesignFloat Delicious BlinkList Furl

0 கருத்துகள்: on "டெல்லியை விட்டு வெளியேறக் கூடாது - கிலானிக்கு போலீஸ் உத்தரவு - கஷ்மீரில் இன்று முழு அடைப்பு"

கருத்துரையிடுக