21 பிப்., 2011

அமெரிக்காவின் கொலைவெறித் தாக்குதலில் ஆஃப்கானில் 64 அப்பாவி மக்கள் மரணம்

காபூல்,பிப்.21:கிழக்கு ஆப்கானிஸ்தானில் குன்னார் மாகாணத்தில் கடந்த நான்கு தினங்களாக நேட்டோ படையும், ஆப்கான் அரசுப் படையும் இணைந்து நடத்திவரும் கொலைவெறித் தாக்குதலில் 64 பேர் கொல்லப்பட்டுள்ளனர்.

பெண்களும், குழந்தைகளும் உள்பட அப்பாவி மக்கள் கொல்லப்பட்டதாக மாகாண கவர்னர் ஃபஸ்லுல்லாஹ் வாஹிதி தெரிவிக்கிறார்.

வான்வழி மற்றும் தரைவழித் தாக்குதல்களை அந்நிய ஆக்கிரமிப்பு படையினர் நடத்தியதாக அவர் தெரிவிக்கிறார். கொல்லப்பட்டவர்களில் 20 பேர் பெண்கள், 29 பேர் குழந்தைகள், 15 பேர் ஆண்களாவர்.

கடந்த இரண்டு ஆண்டுகளாக ஆப்கானிஸ்தானில் தாலிபான் வேட்டை என்றபெயரில் அமெரிக்க தலைமையிலான அந்நிய ஆக்கிரமிப்பு படையினர் நடத்தும் இத்தகைய கொடூரத் தாக்குதலில் ஏராளமான அப்பாவி மக்கள் பலியாகி வருகின்றனர்.

ஆளில்லா விமானங்கள் மூலமும் இதரவழிகள் மூலமாகவும் சிவிலியன் பகுதிகளில் அமெரிக்கா நடத்திவரும் தாக்குதல்களுக்கு எதிராக கடுமையான எதிர்ப்புகள் கிளம்பிய பிறகும் அமெரிக்கா தனது கொடூர தாக்குதல்களை நிறுத்தவில்லை. அதேவேளையில், பத்திரிகைகளில் வெளியான மரண எண்ணிக்கையை குறித்து தெரியாது என நடிக்கிறார் நேட்டோ செய்தித் தொடர்பாளர்.

குன்னார் மாகாணத்தில் 30 தாலிபான் போராளிகள் கொல்லபட்டதாகவும், 7 சிவிலியன்களுக்கு காயமேற்பட்டதாகவும் நாடகமாடுகிறது நேட்டோ. அமெரிக்காவின் கைப்பாவையான ஹமீத் கர்ஸாய் 50க்கும் மேற்பட்ட அப்பாவிகள் கொல்லப்பட்டதாக முதலைக் கண்ணீர் வடிக்கிறார்.

செய்தி:தேஜஸ் மலையாள நாளிதழ்

Digg Google Bookmarks reddit Mixx StumbleUpon Technorati Yahoo! Buzz DesignFloat Delicious BlinkList Furl

1 கருத்துகள்: on "அமெரிக்காவின் கொலைவெறித் தாக்குதலில் ஆஃப்கானில் 64 அப்பாவி மக்கள் மரணம்"

tamem சொன்னது…

as in egypt,tunishia,and libya there should be a resurgence in afghanistan to get back their rule so that people can live in peace

கருத்துரையிடுக