21 பிப்., 2011

ஜெர்மன் பேக்கரி குண்டுவெடிப்பு: உண்மைக்குப் புறம்பான ஏ.டி.எஸ்ஸின் வாதங்கள்

மும்பை/புனே,பிப்.21:ஜெர்மன் பேக்கரி குண்டுவெடிப்பில் மஹாராஷ்ட்ரா தீவிரவாத எதிர்ப்பு படையின் வாதங்கள் பொய்யென நிரூபணமாகிறது.

மொபைல் ஃபோன் அலாரம் மூலம் குண்டுவெடிப்பை நிகழ்த்தியதாக ஏ.டி.எஸ் குற்றப்பத்திரிகையில் குறிப்பிட்டுள்ளது. ஆனால், குண்டுவெடிப்பில் மொபைல் ஃபோன் பயன்படுத்தப்படவில்லை என ஃபாரன்சிக் வல்லுநர்கள் தெரிவித்துள்ளனர்.

இவ்வழக்கில் ஹிமாயத் பேக் கைது செய்யப்பட்டுள்ளார். ஏற்கனவே இவர் குண்டுவெடிப்பு நிகழும்பொழுது சிறையிலிருந்தார் என அவரது வழக்கறிஞர் தெரிவித்திருந்தார். மேலும் புனே குண்டுவெடிப்பு வழக்கில் யாஸீன் பட்கல் மற்றும் முஹ்ஸின் சவுதரி ஆகியோர் போலீசாரால் தேடப்படுகின்றனர்.

வெடிப்பொருட்கள் நிரப்புவதற்காக வாங்கிய பையும், குண்டுவெடிப்பிற்கு உபயோகித்த நோக்கிய மொபைல் ஃபோனும் மும்பையிலிருந்து குற்றஞ்சாட்டப்பட்டவர்கள் வாங்கியதாக குற்றப்பத்திரிகையில் கூறப்பட்டுள்ளது. ஆனால் மொபைல் ஃபோன் உபயோகித்த ஆதாரங்கள் ஒன்றும் ஃபாரன்சிக் பரிசோதனையில் கிடைக்காதது ஏ.டி.எஸ்ஸை அங்கலாய்ப்பில் ஆழ்த்தியுள்ளது.

இண்டர்நேசனல் எக்யூப்மெண்ட் ஐடென்டிடி நம்பர்(I.M.E.I) அளிக்குமாறு இதர புலனாய்வு ஏஜன்சிகள் கேட்ட பிறகும் ஏ.டி.எஸ்ஸால் கொடுக்க முடியவில்லை. ஆனால், இதுத்தொடர்பான புதிய ஆதாரங்களை சமர்ப்பிப்பதாக ஏ.டி.எஸ் புனே நீதிமன்றத்தில் தெரிவித்துள்ளது.

ஃபாரன்சிக் பரிசோதனையில் மொபைல்ஃபோன் உபயோகித்ததற்கான ஆதாரம் எதுவும் கண்டுபிடிக்கப்படவில்லை என ஹிமாயத் பேக்கின் வழக்கறிஞர் எ.ரஹ்மாத் தெரிவித்துள்ளார்.

2006-ஆம் ஆண்டிலிருந்தே இந்தியாவில் நடந்த பல குண்டுவெடிப்புகளுக்கு ஹிந்துத்துவா பயங்கரவாதிகள்தாம் காரணம் என அஸிமானந்தாவின் ஒப்புதல் வாக்குமூலத்தில் தெளிவாகியுள்ள சூழலில் புனே குண்டுவெடிப்புக் குறித்த ஏ.டி.எஸ் விசாரணையில் சந்தேகங்கள் எழுந்துள்ளன.

ஜெர்மன் பேக்கரி குண்டுவெடிப்பு விசாரணை நிறைவடையவில்லை என கடந்தவாரம் மத்திய உள்துறை செயலாளர் ஜி.கே.பிள்ளை தெரிவித்திருந்தார்.

ஜெர்மன் பேக்கரி குண்டுவெடிப்பு வழக்கில் துவக்கம் முதலே வீழ்ச்சிகள் ஏற்பட்டுள்ளன. முதலில் இவ்வழக்கில் மங்களூரைச் சார்ந்த அப்துல்ஸமது பட்கல் என்பவர் கைது செய்யப்பட்டார். ஆனால், இவருக்கெதிராக ஆதாரங்கள் ஒன்றும் சமர்ப்பிக்கப்படவில்லை. பின்னர் குண்டுவெடிப்பில் நேரடியாக தொடர்புடையவர் எனக்கூறி ஹிமாயத் பேக் கைது செய்யப்பட்டார். இவர் மஹாராஷ்ட்ராவில் லஷ்கர்-இ-தய்யிபாவின் தலைமைப் பொறுப்பை வகிக்கிறார் என ஏ.டி.எஸ்ஸின் ராகேஷ் மரியா குற்றஞ்சாட்டியிருந்தார்.

ஆனால், பெய்க் ஒருபோதும் புனேவுக்கு வந்ததில்லை என ஏ.டி.எஸ்ஸின் துணை ஜெனரல் ரவீந்திரகதம் தெரிவிக்கிறார். இவ்வழக்கில் சில சாட்சிகள் குற்றப்பத்திரிகையிலிருந்து நீக்கப்பட்டுள்ளனர் என பெய்க்கின் வழக்கறிஞர் சுட்டிக்காட்டுகிறார்.

செய்தி:தேஜஸ் மலையாள நாளிதழ்

Digg Google Bookmarks reddit Mixx StumbleUpon Technorati Yahoo! Buzz DesignFloat Delicious BlinkList Furl

0 கருத்துகள்: on "ஜெர்மன் பேக்கரி குண்டுவெடிப்பு: உண்மைக்குப் புறம்பான ஏ.டி.எஸ்ஸின் வாதங்கள்"

கருத்துரையிடுக