21 பிப்., 2011

முஸ்லிம்கள் தேசப்பற்று மிக்கவர்கள் - ஜனதா தளத்தில் இணைந்த பஜ்ரங்தள் தலைவர் பேட்டி

பெங்களூர்,பிப்.21:கர்நாடகா மாநிலத்தில் கிறிஸ்தவ சர்ச்சுகள் மீது நடத்தப்பட்ட தாக்குதல்களில் முக்கிய குற்றவாளியான ஹிந்துத்துவா பயங்கரவாத இயக்கமான பஜ்ரங்தள்ளின் முன்னாள் கண்வீனர் மஹேந்திர குமாரும் ஆதரவாளர்களும் மதசார்பற்ற ஜனதாதளத்தில் இணைந்தனர்.

ஹெச்.டி.தேவகவுடா தலைமையிலான மதசார்பற்ற ஜனதாதளத்தில் மஹேந்திர குமாருக்கு உறுப்பினர் அந்தஸ்தை வழங்கினார் அக்கட்சியின் மாநிலத் தலைவர் குமாரசுவாமி.

கடந்த 2008 ஆம் ஆண்டு மங்களூர் மற்றும் சிக்மகளூர் ஆகிய இடங்களில் கிறிஸ்தவ சர்ச்சுகள் மீது நடத்தப்பட்ட தாக்குதல்களுக்கு பொறுப்பேற்றதைத் தொடர்ந்து இவர் பஜ்ரங்தள் கண்வீனர் பொறுப்பிலிருந்து நீக்கப்பட்டிருந்தார். சிறிதுகாலம் சிறையில் அடைக்கப்பட்டிருந்தார். தங்களது சொந்த ஆதாயங்களுக்காக பா.ஜ.கவும், சங்க்பரிவார அமைப்புகளும் மதங்கள் மற்று ஜாதிகளுக்கிடையே மோதலை உருவாக்குகின்றனர் என குற்றஞ்சாட்டித்தான் மஹேந்திரகுமார் பஜ்ரங்தள்ளை
விட்டு மாறினார்.

’இனிமுதல் மதநல்லிணக்கத்திற்காக பாடுபடுவேன். கிறிஸ்தவர்களுக்கெதிராக இதுவரைச் செய்த அனைத்து அக்கிரமங்களுக்கும் மன்னிப்புக் கோருகிறேன். முஸ்லிம்கள் தேசப்பற்று மிக்கவர்கள்.

கர்நாடகாவில் பா.ஜ.கவின் ஆட்சிக்காலத்தில் எல்லாத் துறைகளிலும் ஊழல் பெருகியுள்ளது.' இவ்வாறு மஹேந்திர குமார் தெரிவித்துள்ளார்.

செய்தி:தேஜஸ் மலையாள நாளிதழ்

Digg Google Bookmarks reddit Mixx StumbleUpon Technorati Yahoo! Buzz DesignFloat Delicious BlinkList Furl

2 கருத்துகள்: on "முஸ்லிம்கள் தேசப்பற்று மிக்கவர்கள் - ஜனதா தளத்தில் இணைந்த பஜ்ரங்தள் தலைவர் பேட்டி"

Firdows சொன்னது…

don't believe them..they are intruders .........
in future , they want to spread their "kavi" in all the parties..mind it.......

பெயரில்லா சொன்னது…

May be he planned to do something against for Muslims or he is going to do start any politics....

Already we have seen lot of people like him...

கருத்துரையிடுக