26 பிப்., 2011

ஈராக்:எழுச்சிப் போராட்டத்தில் துப்பாக்கிச்சூடு: 7 பேர் மரணம்

பாக்தாத்,பிப்.26:அமெரிக்க கைப்பாவையான பிரதமர் நூரி அல் மாலிக்கின் தலைமையிலான அரசின் மக்கள் விரோதப் போக்கிற்கு எதிராக 'வெகுண்டெழும் தினம்'(day of rage) கடைப்பிடிப்பதையொட்டி ஈராக்கின் நகர வீதிகளில் போராட்டம் நடைபெற்றது. இதில் ஏராளமான மக்கள் கலந்துக்கொண்டனர். இந்நிலையில் நூரி அல் மாலிக்கியின் ராணுவத்தினர் நடத்திய அநியாயமான துப்பாக்கிச்சூட்டில் 7 பேர் மரணமடைந்தனர். பாக்தாதின் தஹ்ரீர் சதுக்கத்தில் ஆயிரக்கணக்கானோர் அரசுக்கெதிரான பேரணியில் கலந்துக்கொண்டனர்.

தெற்கு ஈராக்கில் மூஸில், ஹவிஜா ஆகிய நகரங்களில் நூரி அல் மாலிக்கின் ராணுவத்தினருக்கும் மக்களுக்குமிடையே மோதல் நிகழ்ந்தது. இரு நகரங்களிலும் ஏழு பேர் கொல்லப்பட்டனர். பலருக்கு காயமேற்பட்டுள்ளது.

"மெளனமாக இருக்கமாட்டோம்! நாங்கள் பேசுவோம்!" என எழுதப்பட்ட அட்டைகளுடன் போராட்டத்தில் ஈடுபட்ட மக்கள் சாலைகளை சீராக்கவும், மின்சார விநியோகத்தை ஒழுங்குப்படுத்தவும், மக்களுக்காக ஆட்சியை நடத்தவும் அரசை வலியுறுத்தினர்.

அல்காயிதா போராளிகள்தாம் போராட்டத்தை ஏற்பாடுச் செய்துள்ளார்கள் எனக் குற்றஞ்சாட்டி நூரி அல் மாலிக்கின் அரசு ஈராக்கில் போக்குவரத்துக்கு தடை ஏற்படுத்தியிருந்தது.

இதனைத் தொடர்ந்து மக்கள் கால்நடையாக நகரங்களுக்கு வருகைத்தந்து போராட்டங்களில் கலந்துக்கொண்டனர்.

செய்தி:மாத்யமம்

Digg Google Bookmarks reddit Mixx StumbleUpon Technorati Yahoo! Buzz DesignFloat Delicious BlinkList Furl

0 கருத்துகள்: on "ஈராக்:எழுச்சிப் போராட்டத்தில் துப்பாக்கிச்சூடு: 7 பேர் மரணம்"

கருத்துரையிடுக