அம்மான்,பிப்.26:எழுச்சிப் போராட்டத்தில் ஈடுபட்டுள்ள மக்களின் கோரிக்கையை கவனத்தில் கொண்டு ஜோர்டானில் தேர்தல் சட்டத்தை திருத்துவதற்கு ஜோர்டான் அரசு கமிட்டி ஒன்றை நியமித்துள்ளது. தொழிலாளர் அமைப்புகள், அரசியல் கட்சிகள், மனித உரிமை ஆர்வலர்கள், ஓய்வுப்பெற்ற ராணுவ அதிகாரிகள், இதர பிரமுகர்கள் ஆகியோருடன் தேர்தல் சட்ட சீர்திருத்தம் தொடர்பாக பேச்சுவார்த்தை நடத்த எட்டு உறுப்பினர்களைக் கொண்ட கமிட்டி அமைக்கப்பட்டுள்ளது. இதனை அரசு செய்தித் தொடர்பாளர் தாஹிர் அத்வான் தெரிவித்துள்ளார்.
பிரதமர் மஹ்ரூஃப் இக்கமிட்டி தலைவராக செயல்படுவார். ஆறு மாதத்திற்குள் இக்கமிட்டி தனது சிபாரிசுகளை சமர்ப்பிக்கும்.
பாராளுமன்றத்தில் எல்லாப் பிரிவினருக்கும் பிரதிநிதித்துவத்தை உறுதிச்செய்யும் விதமாக தேர்தல் சீர்திருத்தம் அமையும் என தாஹிர் தெளிவுப்படுத்தியுள்ளார்.
நேற்று சீர்திருத்தம் கோரி நேற்று ஜோர்டான் தலைநகர் அம்மானில் எதிர்கட்சியினர் பேரணி நடத்தினர். இஸ்லாமிக் ஆக்ஷன் ஃப்ரண்ட் மற்றும் இதர 19 கட்சியினரின் தலைமையில் இப்பேரணி நடைபெற்றது. ஹுஸைனி மஸ்ஜிதுக்கு அருகிலிருந்து துவங்கிய இப்பேரணியில் பல்லாயிரக்கணக்கான மக்கள் பங்கேற்றனர்.
செய்தி:தேஜஸ் மலையாள நாளிதழ்

0 கருத்துகள்: on "ஜோர்டான்:தேர்தல் சீர்திருத்தத்திற்கு தனி கமிட்டி"
கருத்துரையிடுக