26 பிப்., 2011

பாகிஸ்தானில் நேட்டோ டாங்கர்கள் மீது தாக்குதல்

இஸ்லாமாபாத்,பிப்.26:வடமேற்கு பாகிஸ்தானில் பெஷாவரில் ஆப்கானில் நேட்டோ படையினருக்கு எரிபொருளை ஏற்றிச்சென்ற டாங்கர்கள் மீது தாக்குதல் நடத்தப்பட்டது. இத்தாக்குதலில் 5 பேர் கொல்லப்பட்டனர்.

ஆப்கானிஸ்தானிற்கு சென்றுக் கொண்டிருந்த 18 டாங்கர்கள் இத்தாக்குதலால் தீக்கிரையாயின. பெஷாவரில் டெர்மினலில் நிறுத்தப்பட்டிருந்த லாரிகளில் தாலிபான் போராளிகள் வெடிக்குண்டை பொருத்தியதாக மூத்த போலீஸ் அதிகாரி இம்தியாஸ் ஷா எ.எஃப்.பியிடம் தெரிவித்தார்.

இரண்டு ஓட்டுநர்களும், இரண்டு ராணுவத்தினரும் இத்தாக்குதலில் கொல்லப்பட்டதாக அவர் தெரிவித்துள்ளார். ஆனால், இச்சம்பவத்திற்கு பொறுப்பை எவரும் இதுவரை ஒப்புக்கொள்ளவில்லை.

செய்தி:தேஜஸ் மலையாள நாளிதழ்

Digg Google Bookmarks reddit Mixx StumbleUpon Technorati Yahoo! Buzz DesignFloat Delicious BlinkList Furl

0 கருத்துகள்: on "பாகிஸ்தானில் நேட்டோ டாங்கர்கள் மீது தாக்குதல்"

கருத்துரையிடுக