26 பிப்., 2011

யெமனில் எதிர்ப்பாளர்களுடன் பேச்சுவார்த்தை நடத்த கமிட்டி உருவாக்கம்

ஸன்ஆ,பிப்.26:போராட்டத்தில் ஈடுபட்டுள்ள மக்களுடன் வெளிப்படையாக பேச்சுவார்த்தை நடத்த கமிட்டியை உருவாக்கியுள்ளார் யெமன் ஏகாதிபத்தியவாதி அலி அப்துல்லாஹ் ஸாலிஹ்.

போராட்டத்தில் ஈடுபட்டுள்ள மக்களின் பாதுகாப்பை உறுதிச் செய்ய வேண்டுமென ராணுவத்திற்கு உத்தரவிட்ட பிறகு இந்த புதிய நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது.

32 வருடங்களாக அமெரிக்க ஆதரவுடன் பதவியில் தொடரும் ஸாலிஹ் ராஜினாமாச் செய்யவேண்டுமென மக்கள் கோரி வருகின்றனர்.

மாணவர்கள், பெண்கள், மார்க்க அறிஞர்கள், தொழிலாளர்கள் ஆகிய சமூகத்தின் அனைத்து பிரிவினரும் போராட்டத்தில் பங்காளிகளாக மாறியதைத் தொடர்ந்து அதிபர் சமாதான பேச்சுவார்த்தைக்கு முன்வந்துள்ளார்.

பிரதமரின் தலைமையிலான ஐந்து நபர்களைக்கொண்ட கமிட்டி எழுச்சிப் போராட்டத்தில் ஈடுபட்டுள்ள மக்களுடன் பேச்சுவார்த்தை நடத்தும். மக்களின் கோரிக்கைகள் மற்றும் எண்ணங்களை அங்கீகரித்துக் கொண்டு இப்பேச்சுவார்த்தை நடைபெறும் என ஸாலிஹ் தெரிவித்துள்ளார்.

ஆனால், இதற்கு எதிர்க்கட்சியினர் பதிலளிக்கவில்லை. யெமன் சந்திக்கும் முக்கிய பிரச்சனைகளான வேலையில்லாத் திண்டாட்டம், பொருளாதார நெருக்கடி ஆகியவற்றை எப்படி தீர்ப்பது என்பதுக் குறித்து அதிபரும் மூத்த அதிகாரிகளும் நேற்று முன்தினம் கலந்தாலோசித்தனர்.

வேலையில்லாத் திண்டாட்டத்தை போக்கவேண்டுமென்பது மக்களின் முக்கிய கோரிக்கையாகும். ஒரு மாதமாக தொடரும் எழுச்சிப் போராட்டத்தில் இதுவரை 13 பேர் கொல்லப்பட்டுள்ளனர் என அதிகாரப்பூர்வ புள்ளிவிபரங்கள் தெரிவிக்கின்றன. அதேவேளையில் யெமனுக்கு அமெரிக்காவின் ராணுவ உதவி தொடரும் என அமெரிக்க வெளியுறவுத்துறை செய்தித் தொடர்பாளர் பி.ஜே.க்ரவ்லி அறிவித்துள்ளார்.

ராணுவம் மக்கள் மீது ஆயுதங்களை பயன்படுத்துவதாக கடந்த தினங்களில் செய்திகள் வெளியாயின. தீவிரவாதத்திற்கெதிரான போராட்டத்திற்குத்தான் ஆயுதங்கள் வழங்குவதாக க்ரவ்லி நியாயப்படுத்துகிறார்.

ஸன்ஆவில் நேற்று பல்லாயிரக்கணக்கானோர் கலந்துக்கொண்ட பிரம்மாண்ட பேரணி நடைபெற்றது.

செய்தி:தேஜஸ் மலையாள நாளிதழ்

Digg Google Bookmarks reddit Mixx StumbleUpon Technorati Yahoo! Buzz DesignFloat Delicious BlinkList Furl

0 கருத்துகள்: on "யெமனில் எதிர்ப்பாளர்களுடன் பேச்சுவார்த்தை நடத்த கமிட்டி உருவாக்கம்"

கருத்துரையிடுக