1 பிப்., 2011

இனப்படுகொலை மோடிக்கு விசா தரும் கனடாவின் முடிவுக்கு உலக சீக்கியர்கள் அமைப்பு எதிர்ப்பு

கனடா(ஒட்டாவா)பிப்.1:2002-ம் ஆண்டு ஆயிரக்கணக்கில் முஸ்லிம் குடிமக்களை படுகொலைச் செய்த வழக்கில் சிக்கியிருக்கும் மோடிக்கு விசா தருவதை எதிர்த்து உலக சீக்கியர்கள் அமைப்பு கனடா குடியேற்றத்துறை அமைச்சர் ஜேசன் கென்னியிடம் எதிர்ப்பு கடிதத்தை கொடுத்துள்ளனர்.

இந்தியாவை ஆளும் காங்கிரஸ் கட்சிக்கு நெருக்கடி கொடுக்கும் ஹிந்துத்துவ உணர்வு மிக்க பாரதி ஜனதா கட்சியை சேர்ந்த ஆட்சேபனைக்குரிய அரசியல் வாதி என்ற கருத்து இருந்தபோதிலும் கென்னியும் மற்ற அரசியல் தலைவர்களும் மோடிக்கு விசா தர விரும்புவதாக பத்திரிக்கைகளுக்கு தெரிவித்துள்ளனர்.

சர்வதேச மனித உரிமை கண்கானிப்பு மற்றும் பொதுமன்னிப்பு அமைப்பு 2000 முஸ்லிம்கள் படுகொலை செய்யப்படுவதற்கு மோடி உதவிசெய்ததாகவும், படுகொலை குறித்து விசாரணை செய்ய தவறிவிட்டதாகவும் குற்றம்சாட்டிய வேளையில் இவர் போன்று வெள்ளை மனதுள்ள அரசியல்வாதிகள் இந்தியாவில் நிறைய இல்லை என்று கெனடிய முன்னாள் உயர் ஆணையர் பீட்டர் சுதர்லாண்ட் கூறியிருந்ததற்கு கடுமையாக ஆட்சேபித்த உலக சீக்கியர்கள் அமைப்பின் தலைவர் ப்ரேம் சிங் வின்னிங், "மோடி சிறுபான்மையினரை நசுக்கி அடக்கி ஒடுக்குபவர் என்று இந்திய மனித உரிமை ஆணையமே கூறியிருக்கும்போது, கனடிய மனித உரிமை வழக்கறிஞராக இருக்கும் நானும் அவரின் வருகைக்கு எதிர்ப்பு தெரிவிக்கிறேன்." என்று கூறியுள்ளார்.

Digg Google Bookmarks reddit Mixx StumbleUpon Technorati Yahoo! Buzz DesignFloat Delicious BlinkList Furl

0 கருத்துகள்: on "இனப்படுகொலை மோடிக்கு விசா தரும் கனடாவின் முடிவுக்கு உலக சீக்கியர்கள் அமைப்பு எதிர்ப்பு"

கருத்துரையிடுக