1 பிப்., 2011

பாக்., ஐ.எஸ்.ஐயுடன் தொடர்பிருப்பதாக சந்தேகம் - ராணுவ கேப்டன் ஷியாம் சுந்தர் ராம் கைது

சண்டிகர்,பிப்:பாகிஸ்தான் உளவு அமைப்பான ஐ.எஸ்.ஐயுடன் தொடர்பிருப்பதாக சந்தேகித்து ராணுவ கேப்டன் ஷியாம் சுந்தர் ராம் என்பவர் கைதுச் செய்யப்பட்டுள்ளார். இவரை சாந்திமந்திர் கண்டோன்மெண்ட் போலீசார் கைதுச் செய்தனர்.

ஹவாலா புரோக்கர்களுடன் ஷியாம் சுந்தருக்கு தொடர்பிருப்பதாகவும் சந்தேகிப்பதாக போலீஸ் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. ஆனால், இதனைக் குறித்து ராணுவ அதிகாரிகள் பதில் கூறவில்லை.

ஹிமாச்சல் பிரதேசத்தில் மாண்டி, சிம்லா ஆகிய இடங்களிலிருந்து நேற்று முன்தினம் ஹவாலா புரோக்கர்களான அம்ரிக்சிங், பகவான்தாஸ் ஆகியோர் கைதுச் செய்யபட்டனர். இவர்களிடமிருந்து கிடைத்த தகவலின் அடிப்படையில் ராணுவ கேப்டன் ஷியாம் சுந்தர் ராம் கைதுச் செய்யப்பட்டார்.

செய்தி:தேஜஸ் மலையாள நாளிதழ்

Digg Google Bookmarks reddit Mixx StumbleUpon Technorati Yahoo! Buzz DesignFloat Delicious BlinkList Furl

0 கருத்துகள்: on "பாக்., ஐ.எஸ்.ஐயுடன் தொடர்பிருப்பதாக சந்தேகம் - ராணுவ கேப்டன் ஷியாம் சுந்தர் ராம் கைது"

கருத்துரையிடுக