பெங்காசி,பிப்.28:லிபியாவில் புரட்சியாளர்களின் கட்டுப்பாட்டில் உள்ள பகுதிகளுக்கான தற்காலிக அரசின் தலைவராக முன்னாள் அமைச்சர் முஸ்தபா அப்துல் ஜலீல் அறிவிக்கப்பட்டுள்ளார்.
இத்தகவலை பெங்காசி நகர நிர்வாகக் குழுவின் உறுப்பினர் ஃபாதி பஜா இன்று செய்தியாளர்களிடம் தெரிவித்தார்.
சட்டத்துறை அமைச்சராக இருந்த முஸ்தபா அப்துல் ஜலீல், அதிபர் கதாஃபிக்கு எதிரான போராட்டத்தில் ஈடுபடுவதற்கு முன்னர் தனது அமைச்சர் பதவியை ராஜினாமா செய்தார் என்பது குறிப்பிடத்தக்கது. லிபியாவின் கிழக்குப் பகுதியில் உள்ள பல்வேறு நகரங்கள் தற்போது புரட்சியாளர்களின் கட்டுப்பாட்டில் உள்ளது.

0 கருத்துகள்: on "லிபியா:புரட்சியாளர்களின் கட்டுப்பாட்டிலுள்ள பகுதியின் தலைவராக முன்னாள் அமைச்சர் அப்துல் ஜலீல்"
கருத்துரையிடுக