28 பிப்., 2011

பாபா ராம்தேவுக்கு சமாஜ்வாதி கட்சி ஆதரவு

லக்னோ,பிப்.28:ஊழலுக்கு எதிரான போராட்டத்தில் பிரபல யோகா குரு பாபா ராம்தேவுக்கு சமாஜ்வாதி கட்சி ஆதரவு தெரிவித்துள்ளது.

அக்கட்சியின் பொதுச்செயலர் சிவ்பால் யாதவ், உத்தரப்பிரதேச மாநிலத்தில் முஸாபர்நகர் அருகேயுள்ள சிசெளலி என்னுமிடத்தில் செய்தியாளர்களுக்கு அளித்த பேட்டியின்போது இத்தகவலை தெரிவித்தார்.

"ஊழலுக்கு எதிராக யார் போராடினாலும் எங்கள் கட்சி அவர்களுக்கு ஆதரவு அளிக்கும். பாபா ராம்தேவுக்கும் ஆதரவு தருவோம்." என்று அவர் கூறியுள்ளார்.

Digg Google Bookmarks reddit Mixx StumbleUpon Technorati Yahoo! Buzz DesignFloat Delicious BlinkList Furl

0 கருத்துகள்: on "பாபா ராம்தேவுக்கு சமாஜ்வாதி கட்சி ஆதரவு"

கருத்துரையிடுக