19 பிப்., 2011

மாவோயிஸ்டுகளால் கடத்தப்பட்ட கலெக்டரை விடுவிக்க கெடு நீடிப்பு

புவனேஸ்வர்,பிப்.19:கலெக்டர் கிருஷ்ணாவை விடுவிப்பது தொடர்பாக பேச தயார் என்று மாவோயிஸ்டுகள் அறிவித்துள்ளனர். இதை அவர்கள் 4 பக்க கடிதம் மூலம் தெரிவித்துள்ளனர். அந்த கடிதத்தில் 7 புதிய நிபந்தனைகளையும், அரசுடன் பேச்சு நடத்த 3 பேர் பெயர்களையும் மாவோயிஸ்டுகள் குறிப்பிட்டுள்ளனர்.

ஒரிசா மாநிலம் மல்கன்கரி மாவட்ட கலெக்டர் ஆர்.வி.கிருஷ்ணா நேற்று முன்தினம் படாபாத என்ற கிராத்தில் நடந்த முகாமுக்கு சென்ற போது மாவோயிஸ்டுகளால் கடத்திச் செல்லப்பட்டார். கலெக்டரை பிணைக் கைதியாக அடர்ந்த காட்டுக்குள் பிடித்து வைத்திருக்கும் மாவோயிஸ்டுகள் "ஒரிசாவில் சிறைகளில் உள்ள சுமார் 700 பழங்குடி இளைஞர்களை உடனே விடுவிக்க வேண்டும்" என்று நிபந்தனை விதித்தனர்.

தங்களது நிபந்தனையை 48 மணி நேரத்துக்குள் நிறை வேற்ற வேண்டும் என்று மாவோயிஸ்டுகள் கெடு விதித்தனர். இந்த கெடு காலத்துக்குள் மல்கன் கரி மாவட்ட காடுகளில் பாதுகாப்பு படையினர் நடத்தும் தேடுதல் வேட்டையை நிறுத்த வேண்டும் என்றும் மாவோயிஸ்டுகள் எச்சரிக்கை விடுத்தனர்.

இதையடுத்து காடுகளில் பாதுகாப்புப்படையினரின் தேடுதல் வேட்டை நிறுத்தப்பட்டது. மாவோயிஸ்டுகளுடன் பேச்சு நடத்து வதற்கான ஏற்பாடுகளையும் செய்தனர். சுவாமி அக்னிவேஷ் மூலம் மாவோயிஸ்டுகளை தொடர்பு கொள்ள ஒரிசா அரசு ஏற்பாடு செய்தது. அதற்கு பலன் கிடைத்துள்ளது.

கலெக்டர் கிருஷ்ணாவை விடுவிப்பது தொடர்பாக பேச தயார் என்று மாவோயிஸ்டுகள் அறிவித்துள்ளனர். இதை அவர்கள் 4 பக்க கடிதம் மூலம் தெரிவித்துள்ளனர். அந்த கடிதத்தில் 7 புதிய நிபந்தனைகளையும், அரசுடன் பேச்சு நடத்த 3 பேர் பெயர்களையும் மாவோயிஸ்டுகள் குறிப்பிட்டுள்ளனர். இந்த கடிதம் மீது அடுத்தக் கட்ட நடவடிக்கை எடுக்க ஒரிசா மாநில அதிகாரிகள் முயற்சிகளில் ஈடுபட்டுள்ளனர்.

மாவோயிஸ்டுகள் அனுப்பியுள்ள கடிதத்தில் காலவரையற்ற வகையில் 'கெடு' நீடிக்கப்பட்டுள்ளது. இதனால் மாவோயிஸ்டுகளுக்கும் ஒரிசா மாநில அரசுக்கும் நாளை மறு நாள் (ஞாயிறு) பேச்சுவார்த்தை நடக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

இதற்கிடையே கலெக்டர் கிருஷ்ணாவை உடனே விடுதலை செய்யக்கோரி மல்கன்கரி மாவட்டம் முழு வதும் நேற்று முழு அடைப்புப் போராட்டம் நடத்தப்பட்டது. இன்று 2-வது நாளாக மல்கன்கரி மாவட்ட மக்கள் போராட்டங்களில் ஈடுபட்டனர்.

Digg Google Bookmarks reddit Mixx StumbleUpon Technorati Yahoo! Buzz DesignFloat Delicious BlinkList Furl

0 கருத்துகள்: on "மாவோயிஸ்டுகளால் கடத்தப்பட்ட கலெக்டரை விடுவிக்க கெடு நீடிப்பு"

கருத்துரையிடுக