16 பிப்., 2011

பஹ்ரைன்-போராட்டத்தில் ஈடுபட்டோர் மீது போலீஸ் துப்பாக்கிச்சூடு

மனாமா,பிப்.16:கடந்த வெள்ளிக்கிழமை பஹ்ரைனில் நடந்த அரசுக்கெதிரான போராட்டத்தில் போலீசாருடன் நடந்த மோதலில் கொல்லப்பட்ட முஷைமாவின் இறுதி ஊர்வலத்தில் போலீசார் துப்பாக்கிச்சூடு நடத்தியதில் ஒருவர் கொல்லப்பட்டார். ஏராளமானோருக்கு காயமேற்பட்டது.

கொல்லப்பட்டவரின் பெயர் ஃபாதல் அலி அல்மட்ரூக் ஆவார். இவர் பறவைகளைச் சுடும் துப்பாக்கியால் சுடப்பட்டுக் கொல்லப்பட்டுள்ளார். ஊர்வலத்தில் பங்கேற்றவர்களிடம் கடுமையாக நடந்துக்கொண்டது பஹ்ரைன் போலீஸ்.

"போலீசார் போராட்டத்தில் நேற்று காலை(15/02/2011) போராட்டத்தில் ஈடுபட்டோர் மீது துப்பாக்கியால் சுட்டபோதும் மக்கள் உறுதியாக நின்று எதிர்த்தனர்" என அல்ஜஸீராவின் செய்தியாளர் தெரிவிக்கிறார்.

பஹ்ரைன் மன்னர் ஷேக் ஹமத் பின் ஈஸா அல் கலீஃபா போராட்டத்தில் ஈடுபட்டோர் இறந்ததற்கு தனது வருத்தத்தை அரசு தொலைக்காட்சி மூலம் தெரிவித்துள்ளார்.

ஷியா எதிர்கட்சியினர் கூறுகையில், இனி பாராளுமன்றத்தில் பங்கேற்கப் போவதில்லை என தெரிவித்துள்ளனர். 'இது முதல் நடவடிக்கை. நாங்கள் பேச்சுவார்த்தையை எதிர்பார்க்கிறோம். வரும் தினங்களில் பாராளுமன்ற கவுன்சிலுக்கு போவதா இல்லையா என்பதை முடிவுச் செய்வோம்' என தெரிவிக்கிறார் அல்விகாஃப் கட்சியைச் சார்ந்த இப்ராஹீம் மத்தார்.

அல்விகாஃப் ஷியா முஸ்லிம்கள் சார்பான வலுவான எதிர்கட்சியாகும். அமீரா அல் ஹுஸைனி என்ற வலைப்பூ பதிவாளர் தெரிவிக்கையில், நான் தனிப்பட்ட ரீதியில் போலீசாருக்கு எவ்வித மதிப்பையும் கொடுப்பதில்லை. ஏனெனில் அவர்கள் பொய் சொல்கிறார்கள். சூழ்ச்சிச் செய்கிறார்கள்.

ஷியாக்கள் அரசு பதவி விலகக் கோருவதால் இது பிரிவினைவாதமாக கவனிக்கப்படுகிறது. ஆனால் இது ஷியாக்களின் எழுச்சி அல்ல. இப்போராட்டத்தில் அனைத்து பிரிவினருமே கலந்துகொண்டுள்ளனர். என அவர் தெரிவிக்கிறார்.

அல்ஜஸீரா

Digg Google Bookmarks reddit Mixx StumbleUpon Technorati Yahoo! Buzz DesignFloat Delicious BlinkList Furl

0 கருத்துகள்: on "பஹ்ரைன்-போராட்டத்தில் ஈடுபட்டோர் மீது போலீஸ் துப்பாக்கிச்சூடு"

கருத்துரையிடுக