16 பிப்., 2011

ஈரானில் கிளர்ச்சியைத் தூண்ட பார்ஸி மொழியில் ட்விட்டர் செய்திகளை பரப்பும் அமெரிக்கா

வாஷிங்டன்,பிப்.16:ஈரானில் அரசுக்கெதிரான போராட்டம் தலைநகர் டெஹ்ரானில் நடந்துவருகிறது. ஈரானின் அணுசக்தித் திட்டத்திற்கு எதிராக பல்வேறு சதிவேலைகளில் ஈடுபட்டுள்ள அமெரிக்கா, துனீசியா, எகிப்து ஆகிய நாடுகளைப் போல் ஈரானிலும் ஒரு புரட்சி உருவாகாதா? என கனவு கண்டுவருகிறது.

ஏற்கனவே முன்னர் ஈரானில் நடந்த அதிபர் தேர்தலில் முறைகேடு நடந்ததாகக்கூறி போராட்டத்தில் ஈடுபட்டவர்களுக்கு ஆதரவு தெரிவித்திருந்தது அமெரிக்கா. ஆனால், அப்போராட்டம் தோல்வியைத் தழுவியது. இந்நிலையில், துனிசீயா, எகிப்து மற்றும் சில அரபுநாடுகளில் நடக்கும் ஏகாதிபத்திய ஆட்சியாளர்களுக்கு எதிரான போராட்டத்தைப் போல் ஈரானிலும் நடைபெற வேண்டுமென அமெரிக்கா விரும்புகிறது.இந்நிலையில் ஈரான் தலைநகரில் நடந்த போராட்டத்தை மேலும் கிளர்ச்சியாக மாற்ற சமூக இணையதளமான ட்விட்டர் மூலம் ஈரானின் அதிகாரப்பூர்வ மொழியான பார்ஸியில் செய்திகளை போஸ்ட் செய்கிறது அமெரிக்கா.

"கெய்ரோவைப்போல் ஒருங்கிணையவும் போராடவும் ஈரான் மக்களை அனுமதியுங்கள்", ’ஈரான் சொந்த மண்ணில் போராட்டங்களை சட்ட விரோதமாக்குகிறது' போன்ற வாசகங்களை அமெரிக்காவின் ஸ்டேட் டிபார்ட்மெண்ட் ட்விட்டரில் அளித்துவரும் செய்தியாகும்.

அரபு மொழியிலான ட்விட்டர் செய்திகளையும் அமெரிக்கா தயாரித்து வருகிறது. ஈரானில் அரசுக்கெதிராக நடக்கும் சிறிய அளவிலான போராட்டத்தையும் ஆதரித்து அறிக்கை விட்டுள்ளார் ஹிலாரி கிளிண்டன். ஆனால், தங்களது கைப்பாவைகளின் ஆட்சி நடக்கும் பஹ்ரைன், யெமன், ஜோர்டான், அல்ஜீரியா போன்ற நாடுகளில் உண்மையிலேயே ஏகாதிபத்திய ஆட்சியாளர்களுக்கு எதிராக நடத்தப்படும் போராட்டங்களைக் குறித்து மெளனம் சாதிக்கிறது அமெரிக்கா.

ஈரானில் ஜனநாயக ஆட்சிதான் நடைபெற்று வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.

Digg Google Bookmarks reddit Mixx StumbleUpon Technorati Yahoo! Buzz DesignFloat Delicious BlinkList Furl

0 கருத்துகள்: on "ஈரானில் கிளர்ச்சியைத் தூண்ட பார்ஸி மொழியில் ட்விட்டர் செய்திகளை பரப்பும் அமெரிக்கா"

கருத்துரையிடுக