புதுடெல்லி,பிப்.19:பாப்ரி மஸ்ஜித் இடித்த வழக்கில் எல்.கே.அத்வானி, முரளி மனோகர் ஜோஷி ஆகியோர் உட்பட பா.ஜ.க தலைவர்கள் மீது சுமத்தப்பட்ட கிரிமினல் சதித்திட்டம் குற்றத்தை நீக்கிய அலகாபாத் உயர்நீதிமன்றத் தீர்ப்பை எதிர்த்து சி.பி.ஐ உச்சநீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்துள்ளது.
'அலகபாத் உயர்நீதிமன்றம் சி.பி.ஐ தாக்கல செய்த ஆதாரங்களை சரியாக கவனத்தில் கொள்ளவில்லை. எனவே அத்வானி உள்ளிட்ட தலைவர்களின் மீதான கிரிமினல் சதித்திட்டம் என்ற குற்றச்சாட்டு சரியாக விசாரிக்கப்படவில்லை. ஆகவே, உச்சநீதிமன்றம் இந்த வழக்கை மீண்டும் விசாரிக்கவேண்டும்' என சி.பி.ஐ மேல்முறையீட்டு மனுவில் கூறப்பட்டுள்ளது.
கடந்த 2001-ஆம் ஆண்டு மே மாதம் அத்வானி உள்பட 21 சங்க்பரிவார் தலைவர்கள் மீதான சதித்திட்டம் தீட்டிய குற்றம் நிரூபிக்கப்படவில்லை எனக்கூறி சி.பி.ஐ சிறப்பு நீதிமன்றம் விடுதலைச் செய்தது. இதனை எதிர்த்து அலகாபாத் உயர்நீதிமன்றத்தின் லக்னோ பெஞ்சில் சி.பி.ஐ தாக்கல் செய்த மறு பரிசீலனை மனு தள்ளுபடிச் செய்யப்பட்டது. இதற்கெதிராகத்தான் சி.பி.ஐ தற்போது உச்சநீதிமன்றத்தில் அப்பீல் செய்துள்ளது.
சங்க்பரிவார் தலைவர்கள் மற்றும் அடையாளம் தெரியாத கரசேவகர்கள் மீது இரண்டு வழக்குகள் பதிவுச் செய்யப்பட்டன. அயோத்தியில் கடந்த 1992-ஆம் ஆண்டு பாப்ரி மஸ்ஜித் இடிக்கப்படும் பொழுது மேடையிலிருந்து பார்வையிட்ட சங்க்பரிவார் தலைவர்கள் மீது ஒரு வழக்கும், மஸ்ஜிதை சுற்றிலும் திரண்டிருந்த கரசேவகர்கள் மீது இன்னொரு வழக்கும் பதிவுச் செய்யப்பட்டிருந்தன.
செய்தி:தேஜஸ் மலையாள நாளிதழ்

0 கருத்துகள்: on "பாப்ரி மஸ்ஜித்:அத்வானிக்கு எதிராக உச்சநீதிமன்றத்தில் சி.பி.ஐ மனு"
கருத்துரையிடுக