மேலும் இந்த சேனலின் நிர்வாகி சரத்குமாரின் வீட்டிலும் சிபிஐ சோதனை நடத்தியது. 10 பேர் கொண்ட சிபிஐ அதிகாரிகள் இந்தச் சோதனைகளை நடத்தினர். சரக்குமாரின் வீட்டிலிருந்து சில ஆவணங்களும் கைப்பற்றப்பட்டுள்ளன.
மிகக் குறைந்த விலையிலான 2ஜி ஸ்பெக்ட்ரம் ஒதுக்கீட்டால் லாபமடைந்த ஷாகித் உசேன் பல்வாவின் ஸ்வான் டெலி்காம்-டி.பி ரியாலிட்டி நிறுவனத்தின் துணை நிறுவனமான சினியுக் மூலம் கலைஞர் தொலைக்காட்சிக்கு ரூ.214 கோடி பணம் தரப்பட்டதாக சிபிஐ குற்றம் சாட்டியுள்ளது.
ஆனால், சினியுக் நிறுவனம் தங்கள் நிறுவனத்தின் பங்குகளை வாங்கவே ரூ.214 கோடியை முதலீடு செய்ததாகவும், பங்கு விலைகள நிர்ணயிப்பதில் சிக்கல் எழுந்ததால் அந்தப் பணத்தை திருப்பி ரூ.31 கோடி வட்டியோடு சேர்த்து சினியுக் நிறுவனத்திடம் தந்துவிட்டதாகவும் கலைஞர் தொலைக்காட்சி கூறியுள்ளது.
மேலும் சினியுக்-டி.பி.ரியாலிட்டி நிறுவனங்களின் தொடர்பு குறித்து தங்களுக்கு ஏதும் தெரியாது என்றும் கலைஞர் தொலைக்காட்சி கூறியுள்ளது. ஆனால், இதை சிபிஐ நம்பவில்லை. குறைந்த விலையில் ஸ்பெக்ட்ரம் தரப்பட்டதற்காக லஞ்சமாக தரப்பட்ட பணத்தில் ஒரு பகுதி தான் இந்த ரூ.214 கோடி என்றும், ஸ்பெக்ட்ரம் விவகாரம் வெளியில் வெடிக்கும் முன் இந்தப் பணத்தை கலைஞர் தொலைக்காட்சிக்கு டி.பி.ரியாலிட்டி தந்ததாகவும், பின்னர் பிரச்சனை பெரிதான பின் அதை கலைஞர் தொலைக்காட்சி திருப்பித் தந்துவிட்டதாகவும் சிபிஐ கருதுகிறது.
இது தொடர்பான ஆவணங்களைத் தேடியே இன்று ரெய்ட் நடத்தப்பட்டுள்ளது. டெல்லியில் இருந்து வந்த 10 பேர் கொண்ட சி.பி.ஐ. குழு நேற்று நள்ளிரவு 12.10 மணிக்குத் தொடங்கி அதிகாலை 5.30 மணி வரை கலைஞர் டிவி அலுவலகத்தில் சோதனை மேற்கொண்டது. அஅப்போது கலைஞர் டி.வி. அதிகாரிகள் உடன் இருந்தனர்.
0 கருத்துகள்: on "2ஜி ஸ்பெக்ட்ரம் விவகாரம் தொடர்பாக 'கலைஞர் டிவி' அலுவலகத்தில் சிபிஐ ரெய்ட்!"
கருத்துரையிடுக