19 பிப்., 2011

சோனியாவிடம் மன்னிப்புக்​ கோரிய அத்வானி

புதுடெல்லி,பிப்.19:சுவிஸ் வங்கிகளில் காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி மற்றும் அவரது கணவரான மறைந்த ராஜீவ் காந்தி ஆகியோருக்கு கணக்கு இருப்பதாக பா.ஜ.க வெளியிட்ட அறிக்கையில் கூறப்பட்டுள்ளதைத் தொடர்ந்து அக்கட்சியின் மூத்தத் தலைவரான எல்.கே.அத்வானி சோனியாவிடம் மன்னிப்புக்கோரி கடிதம் எழுதியுள்ளார்.

வெளிநாட்டு வங்கிகளில் முதலீடுச் செய்யப்பட்டுள்ள கறுப்புப் பணத்தை இந்தியாவுக்குக் கொண்டுவரத் தேவையான வழிமுறைகளை ஆராய பா.ஜ.க பணிக்குழு ஒன்றை(task force) நியமித்திருந்தது.

பா.ஜ.க பணிக்குழுவின் அறிக்கையைத் தொடர்ந்து அதில் கூறப்பட்ட குற்றச்சாட்டுகளை மறுத்து அத்வானிக்கு சோனியா கடிதம் எழுதியிருந்தார். தான் மற்றும் தனது கணவருக்கோ வெளிநாட்டு வங்கிகளில் பணமில்லை என சோனியா சுட்டிக்காட்டியிருந்தார். சோனியாவின் கடிதத்திற்கு பதில் அனுப்பிய அத்வானி அதில் மன்னிப்புக்கோரியுள்ளார்.

பா.ஜ.க வின் பணிக்குழுவின் அறிக்கையில் தனது குடும்பத்தின் பெயர் வெளியாகும் என்ற ஊகம் எழுந்த சூழலில் சுவிஸ் வங்கிகளில் முதலீடுகள் இல்லை என பகிரங்கமாக சோனியா அறிவித்திருக்க வேண்டுமென அத்வானி தனது கடிதத்தில் குறிப்பிட்டுள்ளார்.

எஸ்.குருமூர்த்தி, முன்னாள் ஐ.பி இயக்குநர் அஜீத் டோவல், பேராசிரியர் ஆர்.வைத்தியநாதன், வழக்கறிஞர் மகேஷ் ஜெத்மலானி ஆகிய சங்க்பரிவார சிந்தனைக் கொண்ட நபர்கள் இந்த பணிக்குழுவில் உறுப்பினர்களாக இடம் பெற்றிருந்தனர்.

வெளிநாட்டு வங்கிகளில் 25 லட்சம் கோடி கறுப்புப் பணம் முதலீடுச் செய்யப்பட்டுள்ளதாக பா.ஜ.க பணிக்குழுவின் அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

செய்தி:தேஜஸ் மலையாள நாளிதழ்

Digg Google Bookmarks reddit Mixx StumbleUpon Technorati Yahoo! Buzz DesignFloat Delicious BlinkList Furl

0 கருத்துகள்: on "சோனியாவிடம் மன்னிப்புக்​ கோரிய அத்வானி"

கருத்துரையிடுக