12 பிப்., 2011

எகிப்து நாட்டு மக்கள் நமக்கு ஊக்கமளித்துள்ளார்கள் - பாரக் ஒபாமா

வாஷிங்டன்,பிப்.12:போராட்டத்தின் மூலம் நீதியை பெற்ற எகிப்து மக்கள் நமக்கு உத்வேகமளிக்கின்றார்கள் என அமெரிக்க அதிபர் பாரக் ஒபாமா தெரிவித்துள்ளார்.

எகிப்தில் 30 ஆண்டு காலம் சர்வாதிகார ஆட்சிபுரிந்த ஹுஸ்னி முபாரக் பதவி விலகியதையொட்டி அமெரிக்க அதிபர் பாரக் ஒபாமா கருத்துத் தெரிவிக்கையில் கூறியதாவது: 'எகிப்து மக்களின் மன உறுதியின் வெற்றிதான் முபாரக்கின் ராஜினாமா. இனிமேல் எகிப்து ஒரு போதும் முன்புபோல் இருக்காது. முபாரக்கின் ராஜினாமா துவக்கம் மட்டுமே. ஜனநாயகத்தின் வழியில் இனியும் ஏராளமான தடைகள் உள்ளன. பதிலில்லாத கேள்விகள் மீதமுள்ளன. உண்மையான ஜனநாயகத்திற்கான மாற்றத்தை எகிப்து ராணுவம் உறுதிச்செய்ய வேண்டும். இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.

செய்தி:மாத்யமம்

Digg Google Bookmarks reddit Mixx StumbleUpon Technorati Yahoo! Buzz DesignFloat Delicious BlinkList Furl

0 கருத்துகள்: on "எகிப்து நாட்டு மக்கள் நமக்கு ஊக்கமளித்துள்ளார்கள் - பாரக் ஒபாமா"

கருத்துரையிடுக