24 பிப்., 2011

நடைப்பயிற்சி

பிப்.24: உடற்பயிற்சியில் பலவகைகள் உள்ளன. அவற்றில் ஒன்று நடைப்பயிற்சி. நடைப்பயிற்சி என்பது எதோ முதியவர்களுக்கு மட்டும் என்று எண்ணிவிடக் கூடாது. பள்ளி செல்லும் குழந்தை முதல் பெரியவர்கள் வரை அனைவரும் அவசியம் மேற்கொள்ள வேண்டிய பயிற்சியாகும்.
பொதுவாக நடைப்பயிற்சி செய்ய அதிகாலை நேரமே உகந்தது. காலை எழுந்தவுடன் காலைக் கடன்களை முடித்து, தண்ணீர் அருந்திவிட்டு, இறுக்கமில்லாத ஆடையை அணித்துகொண்டு நடப்பதுதான் நடைப்பயிற்சி. நடைப்பயிற்சி என்றவுடன் சிறிது தூரம் நடப்பது அல்ல. குறைந்தது 2 கி.மீ ஆவது நடக்க வேண்டும். கடற்கரையிலோ, சாலை ஓரங்களிலோ அல்லது பூங்காக்களைச் சுற்றியோ நடக்கலாம்.

நடக்கும்போது பேசிக்கொண்டோ அரட்டை அடித்துக்கொண்டோ பாட்டு கேட்டுக் கொண்டோ நடக்கக் கூடாது.

மெதுவாகவும், அமைதியாகவும் கைகளை நன்கு வீசி மூச்சுக்காற்றை நன்கு உள்வாங்கி வெளியிட்டு நடக்க வேண்டும். நடை ஒரே சீராக இருக்க வேண்டும்.

நடந்து வந்தவுடன் சிறிது நேரம் குனிந்து, நிமிர்ந்து கைகளை பக்கவாட்டில் அசைத்து உடற்பயிற்சி செய்தல் வேண்டும்.

நடைப்பயிற்சி செய்வதால் உண்டாகும் நன்மைகள்.
· உடலில் இரத்த ஓட்டம் சீராக அமையும்.
· உடல் உறுப்புகள் நன்கு இயங்கும். வியர்வை நன்கு வெளியேறும். இதனால் உடலில் உள்ள தேவையற்ற நீர்கள் வெளியேறும். உடல் வலுப்பெறும்.
· காற்றை நன்கு உள்வாங்கி வெளியிடுவதால் நுரையீரல் நன்கு செயல்பட்டு, சுவாச சம்பந்தப்பட்ட நோய்களைப் போக்கி சுவாசத்தை சீராக்குகிறது.
· நடப்பதால் நரம்புகள் பலமடைகிறது, மூளை புத்துணர்வு பெறுகிறது. ஞாபக சக்தி அதிகரிக்கிறது.
· எலும்புகள், பலப்படும். தசைகள் சுருங்கி விரியும்.
· உடலில் தங்கியுள்ள அதிகமான அதாவது தேவையற்ற கொழுப்புகள் கரையும்.
· நல்ல உறக்கம் கிட்டும்.
· நோய் எதிர்ப்பு சக்தி அதிகரிக்கும்.
· முதுமையைத் தள்ளி என்றும் இளமையுடன் இருக்கச் செய்யும்.
· கை, கால் மூட்டு வலி நீங்கும்.
· செரிமான சக்தி அதிகரித்து, நன்கு பசி எடுக்கும்.
· முக்குற்றங்களான வாத, பித்த, கபத்தின் செயல்பாடுகள் சீராக இருக்கும்.
· தினமும் 1 மணி நேரமாவது நடைப்பயிற்சி செய்வது நல்லது.

நடைப்பயிற்சி நமக்கு நலம் தரும் பயிற்சியாகும். ஆரோக்கியத்தை அள்ளித்தரும், பயிற்சி. தினமும் நடைப்பயிற்சி மேற்கொண்டு நோயின்றி ஆரோக்கியமாக வாழ்வோம்.

Digg Google Bookmarks reddit Mixx StumbleUpon Technorati Yahoo! Buzz DesignFloat Delicious BlinkList Furl

0 கருத்துகள்: on "நடைப்பயிற்சி"

கருத்துரையிடுக