அல்ஜியர்ஸ்,பிப்.24:அரசுக்கெதிரான மக்கள் எழுச்சியை தணிப்பதற்காக 19 ஆண்டுகளாக அமுலிலிருக்கும் அவசரச் சட்டத்தை வாபஸ்பெற அந்நாட்டு சர்வாதிகார அரசின் அமைச்சரவை தீர்மானித்துள்ளது.
இதுத்தொடர்பான தீர்மானத்தை அமைச்சரவை அங்கீகரித்ததாகவும், விரைவில் அரசு கெஜட்டில் இது வெளியிடப்படும் எனவும் அரசு வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
அவசரச் சட்டத்தை வாபஸ்பெற வேண்டுமென்பது மக்களின் முக்கிய கோரிக்கையாகும். ஆனால், அரசின் இந்த நடவடிக்கை போராட்டத்தை முடிவுக்குக் கொண்டுவர போதுமானது அல்ல என அல்ஜீரியன் ஹியூமன்ரைட்ஸ் லீகின் தலைவர் முஸ்தஃபா பவ்காஷி தெரிவித்துள்ளார்.
அரசியல்-ஊடக-சமூக துறைகளில் பரிபூரண சுதந்திரம்தான் தேவை. அப்பொழுதுதான் ஜனநாயகத்தை அனுபவிக்க குடிமக்களுக்கு சாத்தியமாகும். எழுச்சிப் போராட்டத்தில் ஈடுபட்டுள்ள மக்களின் கோரிக்கைகளை அங்கீகரிப்பதற்கான திட்டங்களை அதிபர் அப்துல் அஸீஸ் பெளடெஃப்லிகா உடனடியாக பிரகடனப்படுத்துவார் என கருதப்படுகிறது.
செய்தி:தேஜஸ் மலையாள நாளிதழ்

0 கருத்துகள்: on "அல்ஜீரியாவில் அவசரச் சட்டம் வாபஸ்"
கருத்துரையிடுக