5 பிப்., 2011

நபி(ஸல்...)அவர்களின் வாழ்க்கையை முன்மாதிரியாகக் கொண்டு புதிய மாற்றத்திற்கு தலைமை ஏற்கவேண்டும் - இ.எம்.அப்துற்றஹ்மான்

காயங்குளம்(கேரளா),பிப்:பொது வாழ்க்கையிலும், தனிப்பட்ட வாழ்க்கையிலும் அரசியல்-சமுதாய தலைவர்கள் மாசு படிந்தவர்களாக மாறும் இக்காலக்கட்டத்தில் முஹம்மது நபி(ஸல்...)அவர்களின் வாழ்க்கைச் செய்தி மகத்துவமிக்கதாக மாறவேண்டும் என பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியாவின் தேசிய தலைவர் இ.எம்.அப்துற்றஹ்மான் தெரிவித்தார். நபிகளார் பிறந்த மாதமான ரபீயுல் அவ்வல் மாதத்தில் கேரள மாநில பாப்புலர் ஃப்ரண்ட ஆஃப் இந்தியா மாநிலம் முழுவதும் நடத்தும் 'ஹுப்புர்ரஸூல்' (நேசத்திற்குரிய நபி(ஸல்...)) என்ற பிரச்சார நிகழ்ச்சியின் துவக்க விழாவில் உரை நிகழ்த்தினார் அவர்.

உலகில் மாற்றத்தை உருவாக்க இயலுமென பிரகடனப்படுத்தப்பட்ட பொருளாதார, அரசியல் சித்தாங்களை கற்றுத் தந்த காரல் மார்க்சும், ஏங்கல்சும் இன்று அருங்காட்சியகத்திற்கு மாற்றப்பட்டுவிட்டார்கள். துவக்கக் காலத்தில் முதலாளித்துவத்திற்கு எதிராக களமிறங்கிய மார்க்சிஸம் புதியக் காலக்கட்டத்தில் முதலாளித்துவத்தின் சிப்பந்தியாக மாறிவிட்டது. நூறு ஆண்டுகள் கூட தாக்குபிடிக்க அதிர்ஷ்டம் இல்லாத கம்யூனிஸம் எலும்புக்கூடாக மாறிவிட்டது.

ஆட்சியாளர்கள் குத்தகை முதலாளிகளுக்கு சேவை புரிவதற்காக நாட்டு மக்களுக்கு துயரங்களை திணிப்பதோடு, தலைமுறைகளாக மதிக்கப்பட்டு வந்த விழுமியங்களை காலில் போட்டு மிதிக்கின்றார்கள். இதிலிருந்து விடுதலை பெற புதிய தலைமுறையினர் விரும்புகின்றனர். இங்கேதான் நபி(ஸல்...)அவர்களின் செய்தி முக்கியத்துவம் பெறுகிறது.

நபிகளாரைக் குறித்து சீர்திருத்தவாதி, புரட்சியாளர், அமைதியின் தூதர் என பலவாறாக வரலாற்றாய்வாளர்கள் வாழ்த்தினாலும், அவர்களை இறைவனின் தூதராக அங்கீகரிக்க அவர்கள் தயாரில்லை.

நபி(ஸல்...) அவர்கள் மீதான நேசம் நமது நம்பிக்கையின் ஒருபகுதியாகும். நபி(ஸல்...) அவர்களின் வாழ்க்கையை முன்மாதிரியாகக் கொண்டு செயல்பட்டுதான் நபி(ஸல்...) அவர்கள் மீதான நேசத்தை நாம் வெளிப்படுத்த வேண்டும்.

இருபத்தியொன்றாம் நூற்றாண்டில் புதிய மாற்றத்திற்காக உலகம் காத்துக் கொண்டிருக்கிறது. நபி(ஸல்...) அவர்களின் வாழ்க்கையை அடியொற்றி நடந்து நாம் புதிய மாற்றத்திற்கு தலைமை வகிக்கவேண்டும்.'இவ்வாறு இ.எம்.அப்துற்றஹ்மான் உரை நிகழ்த்தினார்.

இந்நிகழ்ச்சிக்கு பாப்புலர் ஃப்ரண்ட் மாநிலத் தலைவர் மெளலவி.அஷ்ரஃப் தலைமை வகித்தார். கேரள மாநில ஆல் இந்தியா இமாம் கவுன்சில் தலைவர் அப்துற்றஹ்மான் பாகவி உள்பட பலர் உரையாற்றினார்.

செய்தி:தேஜஸ் மலையாள நாளிதழ்

Digg Google Bookmarks reddit Mixx StumbleUpon Technorati Yahoo! Buzz DesignFloat Delicious BlinkList Furl

0 கருத்துகள்: on "நபி(ஸல்...)அவர்களின் வாழ்க்கையை முன்மாதிரியாகக் கொண்டு புதிய மாற்றத்திற்கு தலைமை ஏற்கவேண்டும் - இ.எம்.அப்துற்றஹ்மான்"

கருத்துரையிடுக