5 பிப்., 2011

அல்ஜஸீராவின் இணையதளத்தை செயலிழக்க வைத்தவர்கள் ஜனநாயக விரோதிகள் - அல்ஜஸீரா

துபை,பிப்.5:எகிப்தில் ஜனநாயக விரோதிகள் தங்கள் இணையதளத்தில் நுழைந்து அதனை செயலிழக்க வைத்தனர் என அல்ஜஸீரா தொலைக்காட்சியின் நெட்வர்க் வட்டாரம் வெளியிட்டுள்ள செய்தி அறிக்கை கூறுகிறது.

இதுத் தொடர்பாக விசாரணை துவங்கியதாகவும் அல்ஜஸீராவின் செய்தித் தொடர்பாளர் தெரிவிக்கிறார்.

நேற்று காலை அல்ஜஸீராவின் இணயதளத்தில் ஹேக்கர்கள் நுழைந்தனர். இணையதளத்தில் அல்ஜஸீராவுக்கெதிரான கருத்துகள் தென்பட ஆரம்பித்தன. 'எகிப்தின் நாசத்திற்கான ஒருங்கிணைப்பு' என்ற பெயரில் தென்பட்ட பேனரை க்ளிக் செய்தால் அல்ஜஸீராவுக்கெதிரான கடுமையான விமர்சனங்கள் காணப்பட்டன.

இச்சம்பவத்தை கண்டவுடன் தங்களின் பொறியாளர்கள் உடனடியாக அதனை நீக்கிவிட்டு இணையதளத்தின் செயல்பாட்டை வழக்கமான நிலைக்கு கொண்டுவந்தனர் என அல்ஜஸீராவின் செய்தித் தொடர்பாளர் தெரிவிக்கிறார்.

எகிப்தில் பிரச்சனைகள் துவங்கியது முதல் தங்களுடைய இணையதளத்தின் மீது தொடர் தாக்குதல்கள் நடத்தப்பட்டன.

பத்திரிகையாளர்களை சிறையிலடைத்தல், கேமரா மற்றும் உபகரணங்கள் பறிமுதல் செய்தல், சிக்னலை செயலிழக்கச் செய்வது உள்பட பல்வேறு நடவடிக்கைகள் அல்ஜஸீராவுக்கெதிராக மேற்கொள்ளப்பட்டன. இறுதியாக ஹேக்கரிகளின் தாக்குதல் நிகழ்ந்துள்ளது. இதுத் தொடர்பாக விரிவான விசாரணை நடத்தப்படும்.

எல்லா பிரச்சனைகளையும் எதிர்கொண்டு எகிப்திலிருந்து செய்திகளை ஒளிபரப்புவோம். எகிப்தில் கைதுச் செய்யப்பட்ட பத்திரிகையாளர்களை விரைவில் விடுதலைச்செய்ய வேண்டும் என அல்ஜஸீரா நெட்வர்க் கோரிக்கை விடுத்துள்ளது. இதற்கு பிறகு இன்னொரு நபரையும் காணவில்லை. இவர்களின் பாதுகாப்பு மற்றும் நலனில் அல்ஜஸீராவுக்கு மிகுந்த அக்கறை உண்டு என செய்தித் தொடர்பாளர் தெரிவித்துள்ளார்.
செய்தி:மாத்யமம்

Digg Google Bookmarks reddit Mixx StumbleUpon Technorati Yahoo! Buzz DesignFloat Delicious BlinkList Furl

0 கருத்துகள்: on "அல்ஜஸீராவின் இணையதளத்தை செயலிழக்க வைத்தவர்கள் ஜனநாயக விரோதிகள் - அல்ஜஸீரா"

கருத்துரையிடுக